6,000mAh பேட்டரியுடன் Realme யின் புதிய போன் அறிமுகம் மிலிட்டரி கிரேட்அம்சம் கொண்டுள்ளது

Updated on 16-Jun-2025
HIGHLIGHTS

Realme அதிகாரபூர்வமாக அதன் Realme Narzo 80 Lite 5G போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

இந்த போன் MIL-STD-810H மிலிட்டரி கிரேட் சான்றிதழ் பெற்றுள்ளது

இதன் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ,10,499க்கு அறிமுகம் செய்யப்பட்டது

Realme அதிகாரபூர்வமாக அதன் Realme Narzo 80 Lite 5G போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது மேலும் மிக சிறந்த பர்போமான்ஸ் மற்றும் அதிக நீடித்துளைக்கும் தன்மை கொண்ட போனை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தால் இந்த போன் சிறப்பானதாக இருக்கும் மேலும் இந்த போன் MIL-STD-810H மிலிட்டரி கிரேட் சான்றிதழ் பெற்றுள்ளது அதே போல இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Narzo 80x மற்றும் 80 Pro மாடல் போலவே இருக்கிறது மேலும் இதன் பவர்புல் அம்சம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme Narzo 80 Lite 5G விலை மற்றும் விற்பனை

Realme Narzo 80 Lite 5G யின் விலை பற்றி பேசினால் இதன் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ,10,499க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே இதன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ,11,499க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் கஸ்டமர்கள் இந்த இரு வேரியன்டிலும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது ஒன்று ரூ,500 மற்றும் ரூ,700 ஆகும் மேலும் இதன் முதல் விற்பனை ஜூன் 2௦ அன்று இருக்கும் மேலும் இதை இரண்டு கலர் ஆப்சனின் கீழ் Crystal Purple மற்றும் Onyx Black கலரில் வாங்கலாம்

Realme Narzo 80 Lite 5G சிறப்பம்சம்.

Realme Narzo 80 Lite 5G ஆனது 1604 x 720 பிக்சல்கள் 120Hz டைனமிக் ரெப்ராஸ் ரேட் , 240Hz டச் செம்பளிங் ரேட் மற்றும் 625 nits வரை ஹை ப்ரைட்னாஸ் உடன் 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் Arm Mali-G57 MC2 GPU உடன் ஆக்டா கோர் MediaTek Dimensity 6300 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது 4GB / 6GB LPDDR4x RAM மற்றும் 64GB / 128GB UFS 2.2 உஇன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் மூலம் 2TB வரை அதிகரிக்கலாம் . இந்த ஃபோன் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 யில் இயங்குகிறது மற்றும் Google Gemini ஒருங்கிணைப்பை வழங்குகிறது. இந்த ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரை சப்போர்ட் செய்கிறது .

realme NARZO 80 Lite 5G with 6000mAh battery launched

கேமரா செட்டிங் பொறுத்தவரை, Narzo 80 Lite 5G ஆனது f/1.8 அப்ரட்ஜர் மற்றும் பின்புறத்தில் ஆட்டோஃபோகஸ் சப்போர்ட் கொண்ட 32-மெகாபிக்சல் GC32E2 ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் AI சப்போர்டுடன் கூடிய இமேஜிங் மற்றும் AI கிளியர் ஃபேஸ் போன்ற எடிட்டிங் அம்சங்களும் உள்ளன.

இதையும் படிங்க Oneplus 13S மிக சிறந்த ஆபர் ரூ,5000 அதிரடி டிஸ்கவுண்ட் உடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

நார்சோ 80 லைட் 5G 6,000mAh பேட்டரியைக் உடன் , இதில் 15W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த போனில் IP64 ரேட்டிங் மற்றும் இராணுவ தர MIL-STD-810H அதிர்ச்சி ரெசிஸ்டன்ட் சான்றிதழுடன் டஸ்ட் மற்றும் வாட்டர் பாதுகாக்க வருகிறது.

டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 165.6 mm, அகலம் 76.22 mm, திக்னஸ் 7.94 mm மற்றும் எடை 197 கிராம். கனெக்சன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.3, GPS, 3.5 mmஆடியோ ஜாக் மற்றும் USB டைப் C போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :