Realme யின் இந்த போனில் அதிரடியாக ரூ,9000 வரையிலான வேற லெவல் டிஸ்கவுண்ட் எங்கனு பாருங்க

Updated on 10-Jun-2025
HIGHLIGHTS

Realme GT 7 Pro சமிபத்தில் அறிமுகம் செய்துள்ளது

இந்த போனில் அதிரடியாக ரூ,9000 டிஸ்கவுண்ட் பெறலாம்

இந்த போனை மிக பெரிய டிஸ்கவுண்ட் உடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

Realme GT 7 Pro சமிபத்தில் அறிமுகம் செய்துள்ளது அதனை தொடர்ந்து இந்த போனில் அதிரடியாக ரூ,9000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போன் இந்தியாவில் அதன் 12GB+256GB ரூ,54,998 மற்றும் 16GB+512GB ரூ,59,998 அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனை மிக பெரிய டிஸ்கவுண்ட் உடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Realme GT 7 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.

Realme Gt 7 Pro போனை இந்தியாவில் இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்தது அதில்

12GB+256GB – ரூ,54,998
16GB+512GB – ரூ, 59,998

இதன் அடிப்படை 12GB + 256GB வேரியண்டில் ரூ.8,000 தள்ளுபடி வவுச்சர் கிடைக்கிறது, இதனுடன் பேங்க் ஆபர் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,45,998 யில் வாங்கலாம் அதே நேரத்தில் 16GB + 512GB வகைக்கு நிறுவனத்திடமிருந்து ரூ.7,000 தள்ளுபடி வவுச்சர் உடன் ரூ,1000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அதன் பிறகு இதை வெறும் ரூ,51,998யில் வாங்கலாம் இதை இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

இதையும் படிங்க: CMF போனின் சுண்டி இழுக்கும் ஒரேஞ் கலரில் இந்த போனை அதிரடி டிஸ்கவுண்டில் வாங்கலாம்

Realme Gt 7 Pro சிறப்பம்சம்.

இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC-யால் இயக்கப்படுகிறது, இது குவாட்-கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் உள்ளது. RealWorld Eco OLED Plus டிஸ்ப்ளே இந்த போனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் ஒரு ப்ரைமரி கேமரா செட்டப் மற்றும் மேம்பட்ட கூலிங் சிஸ்டம் உள்ளது. Realme GT 7 Pro ஆண்ட்ராய்டு 15 யில் இயங்குகிறது. இந்த சாதனம் நீர் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது.

Realme நிறுவனத்தின் GT 7 Pro ஸ்மார்ட்போன், Qualcomm Snapdragon 8 Elite SoC-ஐக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. Realme GT 7 Pro ஸ்மார்ட்போன், RealmeCare, Screen Damage Protection மற்றும் ஒரு வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் Realme அறிமுகப்படுத்திய மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :