மோட்டோரோலா போல்டபில் ஸ்மார்ட்போன் நவம்பர் 13 தேதி அறிமுகமாகும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Oct 22 2019
மோட்டோரோலா  போல்டபில் ஸ்மார்ட்போன் நவம்பர் 13 தேதி அறிமுகமாகும்.

Make your home smarter than the average home

Make your life smarter, simpler, and more convenient with IoT enabled TVs, speakers, fans, bulbs, locks and more.

Click here to know more

மோட்டோரோலா நிறுவனம் நவம்பர் 13 ஆம் தேதி நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் மோட்டோரோலா தனது ரேசர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருதாக மோட்டோரோலா ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரேசர் ஃப்ளிப் போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

மோட்டோவின் பிரபல ரேசர் பிராண்டிங்கில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. அழைப்பிதழ்களில் மோட்டோரோலா “அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சின்னம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது. 

இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வைட், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. அல்லது 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. அல்லது 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

மோட்டோ நிகழ்வுக்கென மோட்டோ வெளியிட்டிருக்கும் ஜிஃப் படம் பழைய ரேசர் போனின் ஹின்ஜ் புதிய வடிவமைப்பை பெறுவதை குறிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.