Install App Install App

NOKIA 9.3 PUREVIEW மற்றும் NOKIA 7.3 அறிமுக தகவல் வெளியானது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 Jul 2020
HIGHLIGHTS
  • நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 மற்றும் நோக்கியா 6.3 ஆகும். மூன்று புதிய மாடல்களும் மூன்றாவது காலாண்டின் இறுதியிலோ அல்லது நான்காவது காலாண்டின் துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

  • 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது.

NOKIA 9.3 PUREVIEW மற்றும் NOKIA 7.3 அறிமுக தகவல் வெளியானது.
NOKIA 9.3 PUREVIEW மற்றும் NOKIA 7.3 அறிமுக தகவல் வெளியானது.

HMD குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 மற்றும் நோக்கியா 6.3 ஆகும். மூன்று புதிய மாடல்களும் மூன்றாவது காலாண்டின் இறுதியிலோ அல்லது நான்காவது காலாண்டின் துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். 
 
கொரோனாவைரஸ் பாதிப்பு நோக்கியா உற்பத்தி பணிகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்தே புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது.  

முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த காலக்கெடுவில் தாமதம் ஆகும் பட்சத்தில் நான்காவது காலாண்டில் இவை அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

நோக்கியா 9.3 பியூர்வியூ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மொத்தமாக ஐந்து கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 7.3 மாடலை பொருத்தவரை செய்ஸ் ஆப்டிக்ஸ் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் இவற்றின் பிரைமரி சென்சார் 48 அல்லது 64 எம்பி சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 6.3 மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், குவாட் கேமரா சென்சார்களின் பிரைமரி சென்சார் 24 எம்பி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Nokia 9.3 PureView Nokia 7.3 smartphones launched details out here to find the launch date
Tags:
NOKIA 9.3 PUREVIEW LAUNCH ANDROID 10 NOKIA PHONES PRICE HMD GLOBALNOKIA 9.3 PUREVIEW LAUNCH ANDROID 10 NOKIA PHONES PRICE HMD GLOBAL
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
₹ 36999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
₹ 24999 | $hotDeals->merchant_name
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
Xiaomi 11i 5G (Stealth Black, 128 GB)(6 GB RAM)
Xiaomi 11i 5G (Stealth Black, 128 GB)(6 GB RAM)
₹ 24999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status