கானா.காம் சூறையாடப்பட்டது, உபயோகிப்பாளர் விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டது

எழுதியது Nikhil Pradhan | வெளியிடப்பட்டது 29 May 2015
HIGHLIGHTS
  • எஸ்குஎல் இன்ஜக்ஷன் கொண்டு, கானா.காம்-இன் உபயோகிப்பாளர் விவரங்கள் மற்றும் மென்பொருள் நிர்வாக அமைப்புகள் சூறையாடப்பட்டன.

கானா.காம் சூறையாடப்பட்டது, உபயோகிப்பாளர் விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டது

[அண்மைய விவரம்]: டைம்ஸ் இன்டர்நெட்-இன் தலைமை நிர்வாகியின் வேண்டுகோளின்படி விவரங்களை சூறையாடிய நபர், கானா.காம் உபயோகிப்பாளர் விவரங்களை தன் வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் இதற்கு முன்னர் எத்தனை உபயோகிப்பாளர் விவரங்கள் அவர் தளத்தில் இருந்து பார்க்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.டைம்ஸ் இன்டர்நெட்-இன் தலைமை நிர்வாகியான, சத்யன் கஜ்வாணி, இந்த சூறையாடல் காரணமாக, கானா.காம் அனைத்து உபயோகிப்பாளர் விவரங்களையும் மீளமைக்க இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மைய விவரம்- எந்த தகவலும் சேமிக்கப்படவில்லை. வலைத்தளம் நீக்கப்பட்டது. இருப்பினும்  @gaana, அனைத்து உபயோகிப்பாளர் தகவல்களையும் மீளமைக்கிறது. pic.twitter.com/YanYnA0XXA
— சத்யன் கஜ்வாணி (@satyangajwani) May 28, 2015

[உண்மை நிலவரம்]: டைம்ஸ் இன்டர்நெட்-ஆல் நடத்தப்படும், கானா.காம் பிரபலமான இசை ஸ்ட்ரீமிங் சேவை தளமாகும். தற்போது இந்த தளம் சூறையாடப்பட்டு, உபயோகிப்பாளர் விவரம் அனைவரும் பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த செயலை செய்த நபரின் முகநூல் பக்கம் இவர்,பாகிஸ்தானில் உள்ள லாகூர்-ஐ சேர்ந்தவர் என்பதை தெரிவிக்கிறது. எஸ்குஎல் இன்ஜக்ஷன் கொண்டு இவர் தளத்தை சூறையாடியதாக தெரிகிறது.கானா.காம் தற்போது இணையத்தில் இல்லை. இந்த தளத்தின் முதல் பக்கம் பராமரிப்பு செய்தியை தருகிறது. 

சூறையாடியவர் தன் முகநூல் பக்கத்தில், ஒரு இணைப்பை பகிர்ந்துள்ளார். இது கொண்டு யார் வேண்டுமானாலும், கானா தளத்தின் உபயோகிப்பாளர் விவரங்களை காணலாம்(நன்கு தெரிந்த காரணங்களுக்காக நாங்கள் இதன் இணைப்பை இந்த செய்தியில் தரவில்லை). அதிர்ஷ்டவசமாக, இந்த சூறையாடல், ப்ரீமியம் பயனாளர்களின் பண பரிமாற்றம் குறித்து எந்த தகவலையும் அளிக்கவில்லை என்றாலும், கடவுச்சொல் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. எனவே நீங்கள் கானா இணையத்தளத்தின் பயனாளராக இருந்தால், அதன் கடவு சொல்லை வேறொரு தளத்திற்கும் பயன்படுத்தி இருந்தால், அந்த கடவு சொற்களை உடனடியாக மாற்ற நாங்கள் பரிந்துரைக்கிறோம். 

சூறையாடிய நபர்,தளத்தின் நிர்வாக அமைப்புகளையும் தொட்டுள்ளதாக தெரிகிறது. தி நெக்ஸ்ட் வெப் பக்கத்தில் இருக்கும்  திரை புகைப்படங்கள் இதையே தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பு, கானா-வின்  பாதுகாப்பு அணியால் சீர் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு பதிலாக, சூறையாடிய நபர் தன் தளத்தில் பின் கண்டவாறு பகிர்ந்துள்ளார்,”நான் பயன்படுத்திய தாக்குதலுக்கு உள்ளாகும் அளவுரு, நிர்வாகியால் சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போது உள்ள கேள்வி,நான் பயன்படுத்திய தாக்குதலுக்கு உள்ளாகும் அளவுரு இது மட்டும் தானா என்பதாகும்.. ? ;).”

அதிர்ச்சியளிக்கும் விதமாக, கானா.காம், இந்த சூறையாடல் குறித்தோ, உபயோகிப்பாளர் விவரங்கள் இணையத்தில் அம்பலமாகியுள்ளது குறித்தோ தன் உபயோகிப்பளர்களுக்கு ஒரு மெயிலோ,வேறெந்த வித அறிவிப்போ அளிக்கவில்லை. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் கொண்ட, ‘இந்தியாவின் அபிமான இசை பயன்பாடு’ என  பெருமையாக அழைத்து கொள்ளும் ஒரு சேவைக்கு, உபயோகிப்பாளர்களுக்கு இந்த பாதிப்பு குறித்து தெரிவிப்பது, முன்னுரிமை வாய்ந்த ஒன்றாக இல்லை என தெரிகிறது.

தி நெக்ஸ்ட் வெப்  வாயிலாக

Nikhil Pradhan
Nikhil Pradhan

Email Email Nikhil Pradhan

About Me: https://plus.google.com/u/0/101379756352447467333 Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status