இனி கிராமங்களில் நிச்சயமாக கிடைக்கும் இலவச WIFI வரும் மார்ச் 2020 யில் அமல்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 Dec 2019
HIGHLIGHTS
  • பாரத்நெட் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இதுவரை சுமார் 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது.

இனி  கிராமங்களில்  நிச்சயமாக கிடைக்கும் இலவச WIFI வரும் மார்ச் 2020 யில் அமல்.
இனி கிராமங்களில் நிச்சயமாக கிடைக்கும் இலவச WIFI வரும் மார்ச் 2020 யில் அமல்.

கிராமப்புறங்களில் மக்கள் பலர் இங்கு சரியாக நெட்வர்க் கிடைப்பதில்லை அதன் காரணமாக இன்டர்நெட் குறைபாடுகள் அதிக நிலவி வருகிறது என்று பல புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இந்தியா முழுக்க கிராம பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள இலவச வைபை சேவையான பாரத்நெட் மார்ச் 2020 வரை வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப  மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தற்சமயம் பாரத்நெட் தி்ட்டத்தின் கீழ் சுமார் 48,000 கிராமங்களில் வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொது சேவை மையங்களிலும் வங்கி சேவைகள் வழங்கப்படும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். மேலும் இவை டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பகுதிகளாகவும் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

பாரத்நெட் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இதுவரை சுமார் 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது. இலவச வைபை சேவையினை இந்தியா முழுக்க 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

டிஜிட்டல் கிராமங்கள் இணைக்கப்பட்ட கிராமமாக உருவாக்கப்படும். இங்கு பொதுமக்கள் மத்திய அரசின் செயல்திட்டங்களை இ சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிரமாங்களாக மாற்றப்பட இருக்கின்றன. ஹரியானாவின் ரெவாரி மாவட்டம் டிஜிட்டல் கிரமாமமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது சேவை மையம் கிராம அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Tags:
BharatNet
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status