Zoom App யில் புதிய அப்டேட் மற்றும் புதிய அம்சங்களுடன்.

Zoom App யில் புதிய அப்டேட்  மற்றும் புதிய அம்சங்களுடன்.
HIGHLIGHTS

Zoom யின் இந்த அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி உள்ளது.

Zoom செயலியில் புதிய ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன

புதிய அம்சங்கள் மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜூம்  யின் இந்த அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி உள்ளது. புதிய அப்டேட்டில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜூம் செயலியில் புதிய ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன

இத்துடன் புதிய ஃபில்ட்டர்கள், வீடியோ கால்களில் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஆடியோ கால்களுக்கு மேம்பட்ட நாய்ஸ் சப்ரெஷன் வழங்கப்பட்டு உள்ளது. வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவம் கிடைக்காமல் இருந்தது. விர்ச்சுவல் மீட்டிங் அனுபவத்தை புதிய அம்சங்கள் மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.    

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூம் செயலியில் புதிய அம்சங்கள் சமீப காலங்களில் வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழைப்புகளின் செக்யூரிட்டியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், போட்டியை எதிர்கொள்ள ஜூம் புதிய அம்சங்களை வழங்கி உள்ளது.

முன்னதாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் ஆயிரம் பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட்டது. கூகுள் மீட்ஸ் சேவையிலும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் என்க்ரிப்ஷன் மற்றும் இதர அம்சங்களை வழங்கும் பணிகளில் ஜூம் ஈடுபட்டு வருகிறது.

புதிய நாய்ஸ் செட்டிங் ஜூம் செயலியின் செட்டிங் பகுதியில் உள்ளது. இவற்றை லே, மிட் மற்றும் ஹை என பயனர் விருப்பப்படி செட் செய்து கொள்ளலாம். இதேபோன்று ஜூம் வீடியோ செட்டிங்களில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo