Whatsapp யில் 5 கோடி பயனர்களின் டேட்டா லீக் ஆகியுள்ளது.

Whatsapp யில் 5 கோடி பயனர்களின் டேட்டா லீக் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பின் கோடிக்கணக்கான பயனர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்

இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட 84 நாடுகளின் பயனர்களின் டேட்டாக்கள் ஹேக் செய்யப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பின் கோடிக்கணக்கான பயனர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட 84 நாடுகளின் பயனர்களின் டேட்டாக்கள் ஹேக் செய்யப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள சுமார் 487 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. ஹேக் செய்யப்பட்ட தரவுகளில் 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் மொபைல் எண்களும் அடங்கும், அவர்களில் 61.62 லட்சம் தொலைபேசி எண்கள் இந்தியர்களுடையது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 500 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தரவு திருடப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறோம்.

இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo