Whatsapp யில் இனி இதை செய்ய முடியாது வாட்ஸ்அப்-க்கு வந்த புதிய பிரைவசி அம்சம்.

Whatsapp யில் இனி இதை செய்ய முடியாது வாட்ஸ்அப்-க்கு வந்த புதிய பிரைவசி  அம்சம்.
HIGHLIGHTS

வாட்ஸ்அப் க்ரூப்களில் போன் நம்பர் ஷேர் செய்வது, லாக்-இன் அப்ரூவல் என ஏராளமான அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

"வாட்ஸ்அப்-க்கு புதிய பிரைவசி அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது

வாட்ஸ்அப் மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை தனது செயலியில் வழங்க இருக்கிறது

வாட்ஸ்அப் க்ரூப்களில் போன் நம்பர் ஷேர் செய்வது, லாக்-இன் அப்ரூவல் என ஏராளமான அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் வாட்ஸ்அப்-இல் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழித்துக் கொள்ளும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.

"வாட்ஸ்அப்-க்கு புதிய பிரைவசி அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. யாருக்கும் தெரியப்படுத்தாமல் க்ரூப் சாட்களில் இருந்து வெளியேறலாம், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கண்ட்ரோல் செய்வது, வியூ ஒன்ஸ் மெசேஜ்கள் மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தவிர்க்கலாம். உங்கள் குறுந்தகவல்களை பாதுகாத்து, தனியுரிமையை வழங்க தொடர்ந்து புது வழிகளை உருவாக்குவோம்," என மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

இந்த வரிசையில், வாட்ஸ்அப் மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை தனது செயலியில் வழங்க இருக்கிறது. இவற்றை கொண்டு ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ மறைத்து வைப்பது, வாட்ஸ்அப் க்ரூப்களை விட்டு சத்தமின்றி வெளியேறுவது, உரையாடல்களில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுப்பது என ஏராள வசதிகளை பெற முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo