விரைவில் தமிழக ரேஷன் கடைகளில் Wi-Fi கொண்டு வர திட்டம்.

விரைவில் தமிழக ரேஷன் கடைகளில் Wi-Fi  கொண்டு வர திட்டம்.
HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் வைஃபை இணைய வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 35,323 நியாய விலைக்கடைகள் உள்ளன. பின்பு இதில் 10,279 கடைகள் பகுதி நேர கடைகளாக உள்ளன.

நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் (ISP கள்) மற்றும் பலவற்றிற்கான உள்கட்டமைப்பு அமைவு செயல்முறையை எளிதாக்குவதன் மூலம் அந்தந்த மாநிலத்தில் டிஜிட்டல் இணைப்பு நிலையை முன்னோக்கி தள்ள முயற்சிக்கின்றன. ரேஷன் கடைகளை வை-பை பாயின்ட்களாக மாற்ற முடியுமா என்பதை ஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை தமிழகம் தற்போது நடத்தி வருகிறது. இந்த ரேஷன் கடைகளுக்கு அருகில் 200 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் பயனர்களுக்கு பெயரளவிலான கட்டணத்தில் வைஃபை இணைப்பை வழங்க அரசு விரும்புகிறது. ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, கூட்டுறவு இணைப் பதிவாளர்களின் கீழ் உள்ள கூட்டுறவுத் துறை அதிகாரிகள் குழு இந்த சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் வைஃபை இன்டர்நெட் வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்குவேண்டி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 35,323 நியாய விலைக்கடைகள் உள்ளன. பின்பு இதில் 10,279 கடைகள் பகுதி நேர கடைகளாக உள்ளன.

மேலும் நகரப்புறங்களில் இன்டர்நெட் சேவையை பெறும் அளவுக்கு கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேங்களிலும் வசிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்றுதான் கூறவேண்டும். எனவே இந்த குறைபாட்டை தீர்க்க கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேங்களிலும் எளிதாக இன்டர்நெட் சேவையை வைஃபை மூலம் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக சில கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. மேலும் 2 முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒவ்வொரு கடையும் செயல்படுகிறது. எனவே கடைகள் இருக்கும் இட வசதிகள், வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதலை பெறுவது,கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது கிராம்புறங்களில் இன்டர்நெட் தளங்களின் வேகம் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது. எனவே அரசின் வைஃபை வசதி கிடைத்தால் இந்த வேகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மக்கள் ரேசன் கடைகளை இணைய தள மையங்களாக பயன்படுத்தக் கொள்ள முடியும்.

அதேபோல் அரசு சேவை என்பதால் கட்டணமும் குறைவாக இருக்கும். பின்பு ரேஷன் கடைகளுக்கும் வருமானம் ஈட்டுவதாக அமையும் என்பதுகுறிப்பிடத்தக்கது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo