Siri லீக் செய்தது ஆப்பிளின் ஸ்பெஷல் Invite ,

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 14 Apr 2021
HIGHLIGHTS
  • ஆப்பிளின் வொய்ஸ் அசிஸ்டன்ட் சிரி குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதம் நடைபெற்று வருகிறது

  • ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி பிரத்யேக நிகழ்வை நடத்த இருக்கிறது

  • புதிய ஐபேட் ப்ரோ, ஏர்டேக்ஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் அறிமுகம்

Siri  லீக் செய்தது  ஆப்பிளின்  ஸ்பெஷல்  Invite ,
Siri லீக் செய்தது ஆப்பிளின் ஸ்பெஷல் Invite ,

ஆப்பிளின் வொய்ஸ் அசிஸ்டன்ட் சிரி குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதம் நடைபெற்று வருகிறது. உண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய நிகழ்வின் முக்கியமான தகவலை சிரி லீக் செய்தது . இருப்பினும், இது தொடர்பாக நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் போன்றவை தொடங்கப்படுகின்றன அல்லது அவற்றின் வெளியீடு குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன. சிரி சமூக ஊடகங்களில் ட்ரெண்டாக இருப்பதற்கான காரணம் என்னவென்றால், ஆப்பிளின் சிறப்பு நிகழ்வு இருக்கும் போது ஒரு பயனர் சிரியிடம் கேட்டால், அவருக்கு பதில் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி பிரத்யேக நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த தகவல் தவறுதலாக வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஏர்டேக்ஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஏப்ரல் 20 நிகழ்வு குறித்து ஆப்பிள் எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சிரியிடம் அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதி கேட்டதற்கு `ஏப்ரல் 20 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்கள் ஆப்பிள் வலைதளத்தில் காணலாம்' என பதில் அளித்துள்ளது. 

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிகழ்வு குறித்து விரைவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இது விர்ச்சுவல் முறையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபேட் ப்ரோ மாடல்கள், ஆப்பிள் ஏர்டேக்ஸ் போன்றவை அறிமுகம் செய்யப்படலாம்.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: siri leaked apple special event date
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status