சாம்சங், இண்டெல் தயார் செய்துள்ளது உலகின் முதல் ஸ்லைடபிள் டிஸ்பிளே.

சாம்சங், இண்டெல்  தயார் செய்துள்ளது உலகின் முதல் ஸ்லைடபிள் டிஸ்பிளே.
HIGHLIGHTS

சாம்சங் டிஸ்ப்ளே மற்றும் சிப் தயாரிப்பாளரான இன்டெல் உலகின் முதல் 17-இன்ச் ஸ்லைடபிள் டிஸ்ப்ளேவை பிசிக்களுக்காக உருவாக்கியுள்ளது.

இன்டெல்லின் இன்னோவேஷன் டே நிகழ்வின் போது, ​​சாம்சங் டிஸ்ப்ளே தலைமை நிர்வாக அதிகாரி ஜேஎஸ் சோய் 13-இன்ச் டேப்லெட்டிலிருந்து 17-இன்ச் டிஸ்ப்ளேக்கு ஸ்லைடு செய்யும் முன்மாதிரி பிசியை நிரூபித்தார்.

இண்டெல் இன்னோவேஷன் டே நிகழ்வை ஒட்டி இண்டெல், சிஇஒ பேட் கெல்சிங்கர் மற்றும் சாம்சங் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஎஸ் சோய் இணைந்து ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ அறிமுகம் செய்தனர். இது உலகின் முதல் 17 இன்ச் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப் ஆகும்.

இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை ஜன்னல் போன்று பக்கவாட்டு பகுதியில் திறக்க முடியும். கடந்த ஆண்டு சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் ஸ்மார்ட்போனில் சிறிய அளவில் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. அகலமான மற்றும் செங்குத்தான ஸ்லைடபில் போர்டபில் ப்ரோடோடைப்கள் 2022 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், பெரிய டிஸ்ப்ளே கொண்ட சாதனமாக இது அமைந்துள்ளது.

ஸ்லைடபில் டிஸ்ப்ளே மாடல் எப்போது வர்த்தக பயன்பாட்டுக்காக எப்போது அறிமுகம் செய்யப்படும் என இண்டெல் அல்லது சாம்சங் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்த டிஸ்ப்ளே விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றன.

தென் கொரியா வந்திருந்த போது இந்த ப்ரோடோடைப்-ஐ பார்த்ததாக ஜெஎஸ் சோய் தெரிவித்து இருக்கிறார். இது எதிர்கால கணினிக்கான தலைசிறந்த எடுத்துக் காட்டு தான் இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளே என அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக அசுஸ் நிறுவனம் சென்புக் 17 போல்டு OLED மடிக்கக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விற்பனை விரைவில் துவங்க உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo