samsung galaxy சீரிஸ் கேலக்ஸி watch55 மற்றும் கேலக்ஸி watch5-pro அறிமுகம்.

samsung galaxy சீரிஸ் கேலக்ஸி watch55 மற்றும் கேலக்ஸி watch5-pro அறிமுகம்.
HIGHLIGHTS

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது

கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன

இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரத்து 135 என்றும், எல்டிஇ வெர்ஷன் விலை 329.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் சபையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே, பயோ ஆக்டிவ் சென்சார், எக்சைனோஸ் W920 டூயல் கோர் பிராசஸர், ஒன் யுஐ வாட்ச் 4.5 மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

விலை விவரங்கள்: 

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 மாடலின் 40 மில்லிமீட்டர் ப்ளூடூத் வெர்ஷன் விலை 279.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரத்து 135 என்றும், எல்டிஇ வெர்ஷன் விலை 329.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 44 மில்லிமீட்டர் ப்ளூடூத் வெர்ஷன் விலை 309.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 505 என்றும் எல்டிஇ வெர்ஷன் விலை 359.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 460 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 கேலக்ஸி வாட்ச் சீரிஸ் சிறப்புமாசம்.

கேலக்ஸி வாட்ச் 5 சீரிசில் 1.2 இன்ச் மற்றும் 1.4 இன்ச் சூப்பர் AMOLED சபையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சபையர் க்ரிஸ்டல் அதிக உறுதியானது ஆகும். இத்துடன் டைட்டானியம் கேசிங் மூலம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பெசல் டிசைன் கொண்டுள்ளது. இரு வாட்ச் மாடல்களிலும் டூயல் கோர் எக்சைனோஸ் W920 பிராசஸர், 1.5 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளன.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் பயோ ஆக்டிவ் சென்சார் – ஆப்டிக்கல் ஹார்ட் ரேட், எலெக்ட்ரிக்கல் ஹார்ட் சிக்னல், ஹார்ட் ரேட், இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, ஸ்டிரெஸ் உள்ளிட்டவைகளை கண்டறிய பயோ-எலெக்ட்ரிக்கல் இம்பெண்டன்ஸ் அனலசிஸ் போன்ற வசதிகளை வழங்கும் ஒற்றை சிப் ஆகும். மேலும் பயனர்கள் இரத்த அழுத்தம் மற்றும் இசிஜி உள்ளிட்டவைகளை மணிக்கட்டில் இருந்த படி அறிந்து கொள்ளலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo