Microsoft Teams ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி அறிமுகம்.

Microsoft Teams ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர்  கலந்து கொள்ளும்  வசதி அறிமுகம்.
HIGHLIGHTS

20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது

இந்த சேவை ஜூலை மாத மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 அப்டேட்களில் அறிவிக்கப்பட்டது.

இந்த அம்சம் தற்சமயம் பயனர்களுக்கு உலகம் முழுக்க வழங்கப்படுகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டீம்ஸ் சேவையில் அடிக்கடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது. இந்த வசதி ஒருபுறம் நடைபெறும் மீட்டிங்களில் வேளை செய்யும். 

 முதற்கட்டமாக இந்த சேவை ஜூலை மாத மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 அப்டேட்களில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே சமயத்தில் ஒருவர் உரையாற்றுவதை மற்றவர்கள் பார்க்கவும், கேட்கவும் முடியும். ஆனால் மீட்டிங்கில் கலந்து கொள்வோர் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது

உலகில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் தனுத டீம்ஸ் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படு வருகிறது. இவை வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு உதவும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

இந்த அம்சம் தற்சமயம் பயனர்களுக்கு உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவை ஸ்லாக் சேவைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இருவழி மீட்டிங்கில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo