மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Surface Hub 2எஸ் இந்தியாவில் அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Surface Hub  2எஸ் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலில் 50.5 இன்ச் 4கே மல்டி-டச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது

சர்பேஸ் ஹப் 2 கேமரா, சர்பேஸ் ஹப் 2 பென் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் ஹப் 2எஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சர்பேஸ் ஹப் 2 மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகமானது.

சர்பேஸ் ஹப் 2எஸ் மாடல் வியாபார சூழல்களுக்கான ஒட்டுமொத்த டிஜிட்டல் வைட்போர்டு சாதனம் ஆகும். புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலுடன் ஸ்டீல்கேஸ் ரோம் மொபைல் ஸ்டாண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆபீஸ் 365, மைக்ரோசாப்ட் வைட்போர்டு ஸ்கைப் ஃபார் பிஸ்னஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவை வழங்கப்படுகிறது.

புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலில் 50.5 இன்ச் 4கே மல்டி-டச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் வைட்போர்டு, மீட்டிங் தளம் மற்றும் பணி சார்ந்த சூழல்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் சர்பேஸ் ஹப் 2 கேமரா, சர்பேஸ் ஹப் 2 பென் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் அதிகாரப்பூர்வ ஹப் விற்பனையாளர்களிடம் ரூ. 11,89,999 விலையில் கிடைக்கிறது. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டீல்கேஸ் ரோம் மொபைல் ஸ்டாண்ட் விலை ரூ. 1,17,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo