TIKTOK வாங்க நினைக்கும் Microsoft நிறுவனம்.

TIKTOK  வாங்க  நினைக்கும் Microsoft நிறுவனம்.
HIGHLIGHTS

டிக்டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டு விட்டது

டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்-டேன்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். 

உலக அளவில் மிகவும் பிரபலமான குறு விடியோ  செயலியான டிக்டாக், ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டு விட்டது.  இந்த நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்-டேன்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

எனினும், டிக்டாக்  செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட்-டேன்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பை  மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார்.

அதன்படி, டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. 

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo