சிம் கார்ட் ப்லோக் ஆகிவிட்டதாக கூறி ஏமாற்றும் கும்பல் எச்சரிக்கை மக்களே.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 05 Feb 2022 16:20 IST
HIGHLIGHTS
  • சிம் கார்டு ஒரு சில மணி நேரங்களில் பிளாக்காகிவிடும் (முடங்கிவிடும்) என எச்சரிக்கின்றனர்

  • சிம் கார்டு முடங்கிவிடும் என எச்சரிக்கும்

  • மோசடி கும்பலிடமே தீர்வு என்னவென்று கேட்டு தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்

சிம் கார்ட் ப்லோக் ஆகிவிட்டதாக கூறி ஏமாற்றும் கும்பல்  எச்சரிக்கை மக்களே.
சிம் கார்ட் ப்லோக் ஆகிவிட்டதாக கூறி ஏமாற்றும் கும்பல் எச்சரிக்கை மக்களே.

சமீப காலமாக போனில் கால் அல்லது மெசேஜ் கொடுக்கும் கும்பல் ஒன்று, சிம் கார்டுகளுக்கு தேவையான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், உங்களுடைய சிம் கார்டு ஒரு சில மணி நேரங்களில் பிளாக்காகிவிடும் (முடங்கிவிடும்) என எச்சரிக்கின்றனர்.

சமீப காலமாக போனில் கால் அல்லது மெசேஜ் கொடுக்கும் கும்பல் ஒன்று, சிம் கார்டுகளுக்கு தேவையான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், உங்களுடைய சிம் கார்டு ஒரு சில மணி நேரங்களில் பிளாக்காகிவிடும் (முடங்கிவிடும்) என எச்சரிக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கைக்கு பயப்படும் சிலர், மோசடி கும்பலிடமே தீர்வு என்னவென்று கேட்டு தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். சிம் கார்டு முடங்கிவிடும் என எச்சரிக்கும் அந்த மோசடி கும்பல், தொடர்ந்து சிம் கார்டு ஆக்டிவாக இருக்க வேண்டுமென்றால் தாங்கள் சொல்லும் செயலியில் ஆவணங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.

அவர்கள் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் ஆவணங்களை வாடிக்கையாளர்கள் பதிவேற்றும்போது செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் அல்லது பைனான்சியல் தகவல்களை கமுக்கமாக திருடிக் கொள்கின்றனர். இதனை வைத்து வாடிக்கையாளர்களை மிரட்டும் அந்தக் கும்பல், பண மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும், பணம் சார்ந்த தகவல்கள் கிடைத்துவிட்டால் உடனடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை சுருட்டிவிடுகின்றனர். இது ஒருவகையான இணையக் கொள்ளை. இந்தியாவில் இந்தக் கொள்ளை அதிகரித்து வருகிறது. ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் என எந்தநெட்வொர்க் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், அவர்கள் வலையில் விழுந்துவிட்டால், பாரபட்சமில்லாமல் பணக் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் அழைத்து இதுபோன்ற தகவல்களைக் கேட்டால் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளது. ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் நெட்வொர்க் ஆபிஸ்களுக்கு நேரடியாக சென்று இது குறித்து விசாரித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. முழுமையாக விசாரிக்காமல் தகவல்களை பகிர்ந்து கொண்டால், மோசடி கும்பல் கைவரிசையை காட்டிவிடும் எனவும் COAI கூறியுள்ளது.

இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது எனத் தெரிவித்துள்ள செல்லூலார் ஆப்ரேட்டர்ஸ் அசோஷியேசன், ஆதார், பான் கார்டு போன்ற தகவல்களை புதிய செயலி ஒன்றில் அல்லது லிங்கில் பதிவேற்றக்கூறினால், கண்டிப்பாக அது மோசடி என விளக்கமளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனங்களும் தனித்தனியாக அதிகாரப்பூர்வ செயலிகளை வைத்துள்ளன. அந்த செயலிகளைத் தவிர மற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம் எனவும் சி.ஓ.எ.ஐ கூறியுள்ளது. செல்போன் நிறுவனங்கள் மொபைல் ரீச்சார்ஜ் குறித்த தகவல்கள், ஆஃபர்கள் மற்றும் புதிய பிளான்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்ஜாக கொடுக்கின்றன எனத் தெரிவித்துள்ள COAI, இதைத் தவிர வேறு எந்த மெசேஜ் வந்தாலும், உடனடியாக சந்தேகப்படுமாறு அறிவுறுத்தியுள்ளது

மேலும் தொழில்நுட்பச் செய்திகள், ப்ரொடக்ட் ரிவ்யூ, அறிவியல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அப்டேட்களுக்கு Digit.in ஐப் படிக்கவும் அல்லது எங்கள் Google செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

IF YOU RECEIVE A CALL SAYING YOUR PHONE SIM WILL BE BLOCKED DO NOT FALL BE ALERT

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்தியவை கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்

;