ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி?

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 20 Dec 2020
HIGHLIGHTS

ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI போன் நம்பரை நீக்குவது வெகு எளிதாகும்.

உலக அளவில் மிகவும் பிரபலமான இன்டர்நெட் சர்ச் நிறுவனம் கூகுள். பல்வேறு சேவைகளை வழங்கும் கூகுள், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை அளித்து வருகிறது

ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI  நம்பரை நீக்குவது எப்படி?
ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி?

Vostro 3501

Popular tech to stay connected anywhere. Save more on exciting Dell PCs.

Click here to know more

Advertisements

உலக அளவில் மிகவும் பிரபலமான இன்டர்நெட் சர்ச் நிறுவனம் கூகுள். பல்வேறு சேவைகளை வழங்கும் கூகுள், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை  அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் தனிநபர் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என்ற 11 இலக்க நம்பர் திடீரென தானாகவே பதிவானது.

இதுகுறித்து விளக்கமளித்த ஆதார் அடையாள ஆணையம், தங்களது எண் 1947 என்றும், சில விஷமிகள் மக்களைக் குழப்புவதற்காக வேறு ஒரு நம்பரை ஆதார் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா நம்பர் என்று பரப்புகின்றனர் என்று கூறியிருந்தது.

இந்த தவறுக்கு தாங்கள் காரணம் இல்லை என போன் சேவை வழங்கும் நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த கூகுள், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்ஃபோன்களுக்காக 2014-ம் ஆண்டு வழங்கிய ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக அந்த எண் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்த கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தாங்களாகவே அந்த எண்ணை அழித்துவிடலாம் என்றும் தெரிவித்தது.

அந்த நம்பரை  நீக்குவது  எப்படி ?

ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI போன் நம்பரை நீக்குவது வெகு எளிதாகும்.

ஸ்மார்ட்ஃபோன்களில் கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவாகியுள்ள பிற நம்பர்கள் வழக்கமாக எவ்வாறு நாம் டெலீட் செய்வோமோ, அதே போல் UIDAI போன் நம்பர் டெலீட் செய்ய முடியும். ஒரு நபர் ஒரே கூகுள் அக்கவுண்டின் கீழ் கூடுதல் போன்களையும் இணைத்திருந்தால், அந்த போன்களில் பதிவாகியுள்ள UIDAI போன் நம்பரையும் டெலீட் செய்ய வேண்டும்.

அவை டெலீட் செய்யப்பட்டுவிட்டனவா? என்பதை ஒன்றுக்கு 2 முறை செக் செய்து கொள்ளவும். இவ்வாறு டெலீட் செய்வதால், ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவாகியுள்ள பிற தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: How to delete UIDAI number automatically registered on smartphones?
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status