ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி பற்றி தெரியுமா ? அது எப்படி வாங்க பாக்கலாம்.

ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி பற்றி தெரியுமா ? அது எப்படி வாங்க பாக்கலாம்.
HIGHLIGHTS

ஏடிஎம் மெஷின் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது

ஏ.டி.எம் வழியாக உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக லாக்டவுனின் விளைவாக "பாதிக்கப்படும்" வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இந்திய நிறுவனங்கள் பல்வேறு புதிய வழிகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளன.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் சந்தாதாரர்களுக்கு ஏடிஎம் மெஷின் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழியில் உள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், இதை செய்ய எந்த விதமான OTP செயல்முறையும் தேவைப்படாது

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரபூர்வ ட்வீட்டர் அக்கவுண்ட்டின் படி, இந்த புதிய ரீசார்ஜ் வழிமுறையானது AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India போன்ற வங்கிகளின் ஏ.டி.எம் களில் அணுக கிடைக்கும்.

ஏ.டி.எம் வழியாக உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி?

– உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும்.

– மெயின் மெனுவில் “ரீசார்ஜ்” எனும் விருப்பத்தை தட்டவும் அல்லது தேர்வு செய்யவும்.

-நீங்கள் “ரீசார்ஜ்” மெனுவிற்குள் வந்ததும், உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும்.

– உங்கள் Phon எண்ணை உள்ளிட்ட பிறகு, OK / ENTER பொத்தானை அழுத்தவும்

– பின்னர் உங்கள் ஏடிஎம் பின் கோட்-ஐ உள்ளிடவும்.

– இப்போது, தேவையான இடத்திலல் குறிப்பிட்ட ரீசார்ஜ் தொகையை உள்ளிடவும்.

– பின்னர் ரீசார்ஜ் மதிப்பை உறுதிசெய்து என்டர்-ஐ அழுத்தவும்.

– ஏடிஎம் மெஷினினின் ஸ்க்ரீன் இப்போது ரீசார்ஜ் மெசேஜை காண்பிக்கும், அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதை தொடர்ந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மெசேஜைப் பெறுவீர்கள், 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo