Google தனது நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை விரைவில் அறிமுக செய்யும்.

Google தனது நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை விரைவில் அறிமுக செய்யும்.
HIGHLIGHTS

கூகுள் நிறுவனம் தனது நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது

கூகுள் நிறுவனம் தனது நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
 
புதிய கூகுள் நெஸ்ட் 2016 ஆம் ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த கூகுள் ஹோம் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது. இதே சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. முந்தைய எஃப்சிசி விவரங்களில் இந்த சாதனம் உருவாகி இருக்கும் நிறங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது.

புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் அக்டோபரில் நடைபெற இருக்கும் பிக்சல் 5 அறிமுக நிகழ்வில் கூகுள் நெஸ்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கூகுள் நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கரில் டூயல் பேண்ட் வைபை, 30 வாட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரில் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை விட பெரிய டிரைவர்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo