Google search யில் Youtube க்கு முன்னுரிமை வழங்குகிறது.

Google search யில் Youtube க்கு முன்னுரிமை வழங்குகிறது.
HIGHLIGHTS

யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது

கூகுள் தேடலில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. கூகுள் சிஸ்டம்கள் இணையத்தில் மக்கள் தேடல்களுக்கு அதிக தொடர்புடைய

கூகுளில் ஏதேனும் வீடியோக்களை தேடும் போது இணையத்தில் மற்ற தளங்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்டர்நெட் சர்ச் பற்றி தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இணையத்தில் கூடைபந்து விளையாட்டு பற்றி வெளியான வீடியோக்களை தேடிய போது, ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகி சுமார் பத்து லட்சம் பேர் பார்த்த வீடியோவுக்கு மாற்றாக யூடியூபில் சில லட்சம் பேர் பார்த்த வீடியோ கூகுள் தேடலில் முதன்மையாக பட்டியலிடப்பட்டது.

சமீப ஆண்டுகளில் கூகுள் அதிகாரிகள், தேடல்களுக்கான பதில்களில் யூடியூப் வீடியோக்கள் முதலில் தோன்ற செய்ய முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் போட்டியாளர்களை விட யூடியூப் அதிக பார்வையாளர்களை பெற வைக்க முடியும் என கூறப்படுகிறது.

மற்ற வீடியோக்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் வகையில் தேடல் சார்ந்த குறியீடுகளில் கூகுள் பொறியாளர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும், 'யூடியூப் மற்றும் வேறு எந்த வீடியோ தளங்களுக்கும் கூகுள் தேடலில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. கூகுள் சிஸ்டம்கள் இணையத்தில் மக்கள் தேடல்களுக்கு அதிக தொடர்புடைய பதில்களும், அவர்களுக்கு உதவும் வகையிலான பதில்களும் தான் பட்டியலிடப்படுகின்றன' என்று கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.  

அனைவரும் சமம் ஆனால் யூடியூப் முதலில் இருக்கும் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo