Install App Install App

Facebook வேலை செய்கிறது Smartwatch இதன் அம்சம் இப்படி இருக்கும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Feb 2021
HIGHLIGHTS
  • ஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

  • புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

  • புதிய ஸ்மார்ட்வாட்ச் செல்லுலார் இணைப்பு வசதி கொண்டிருக்கும்

Facebook வேலை செய்கிறது  Smartwatch இதன் அம்சம் இப்படி இருக்கும்.
Facebook வேலை செய்கிறது Smartwatch இதன் அம்சம் இப்படி இருக்கும்.

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் செல்லுலார் இணைப்பு வசதி கொண்டிருக்கும். அந்த வகையில் இது ஸ்மார்ட்போன் இல்லாமலும் இயங்கும். இத்துடன் புதிய வாட்ச் பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் பல்வேறு முன்னணி பிட்னஸ் தளங்களுடன் இணைந்து செயல்படும் வசதி கொண்டிருக்கலாம்.

புதிய அணியக்கூடிய சாதனத்தின் விலையை 200 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய சாதனம் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

பேஸ்புக்கின் அணியக்கூடிய சாதனம் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய பேஸ்புக் ஹார்டுவேர் சாதனங்களை போன்றே இதுவும் கூகுள் தளத்தை கொண்டிருக்கும். எனினும், பேஸ்புக் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்களுக்கென சொந்தமாக ஒஎஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: facebook smartwatch in works says report with health features might compete with apple, huawei
Tags:
wearable SmartWatch huawei facebook smartwatch features Facebook smartwatch facebook
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status