டார்க் வெப் இணையதளத்தில் பயனர்களின் டேட்டா திருட்டு

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 06 Mar 2021
HIGHLIGHTS
  • டார்க் வெப் எனும் இணையதளத்தில் ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • டார்க் வெப் தளத்தில் பத்து லட்சம் டாலர்கள் எனும் துவக்க விலையில் ஏலம் விடப்பட்டது

டார்க் வெப் இணையதளத்தில் பயனர்களின் டேட்டா திருட்டு
டார்க் வெப் இணையதளத்தில் பயனர்களின் டேட்டா திருட்டு

சர்வதேச கேமிங் சந்தையில் அதிக பிரபலமான சைபர்பண்க் 2077 மற்றும் தி விட்ச்சர் 3 போன்ற கேம்களை உருவாக்கிய பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் டேட்டாக்கள் திருடப்பட்டு டார்க் வெப் எனும் இணையதளத்தில் ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இதுகுறித்து வெளியான தகவல்களில், பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் டேட்டா, டார்க் வெப் தளத்தில் பத்து லட்சம் டாலர்கள் எனும் துவக்க விலையில் ஏலம் விடப்பட்டது. இறுதியில் 70 லட்சம் டாலர்களுக்கு ஏலம் முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேம் உருவாக்கிய நிறுவனத்தின் ரெட் என்ஜின், சைபர்பண்க் 2077, தி விட்ச்சர் 3 மற்றும் இதர கேம்களின் டேட்டாவை ஹேக்கர்கள் திருடி விற்று இருக்கின்றனர். முன்னதாக பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் பிரபல கேம்களின் சோர்ஸ் கோட் விவரங்கள் தங்களிடம் இருப்பதாக ஹேக்கர்கள் அனுப்பிய தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருந்தது.

ஹேக்கர்களுக்கு பணம் கொடுக்கவோ, சமரசம் செய்யவோ முயற்சிக்க மாட்டோம் என பிராஜ்க்ட் ரெட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டார்க் வெப் தளத்தில் விவரங்களை ஹேக்கர்கள் ஏலம் நடத்தி விற்று இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார்

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: CyberPunk 2077 data leak in dark web
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status