5ஜி டெக்னோலஜியால் தான் கொரோனா பரவுகிறதா ?

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 10 May 2021
HIGHLIGHTS
  • கொரோனா வைரஸ் தொற்று பரவ 5ஜி தான் காரணம் என கூறும் பதிவுகள்

  • 5ஜி நெட்வொர்க் மற்றும் உலகெங்கும் பரவும் கொடிய தொற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை

  • போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன

5ஜி  டெக்னோலஜியால் தான் கொரோனா பரவுகிறதா ?
5ஜி டெக்னோலஜியால் தான் கொரோனா பரவுகிறதா ?

கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக இங்கிலாந்தில் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்போன் டவர்களுக்கும் தீயிடப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ 5ஜி தான் காரணம் என கூறும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், 5ஜி நெட்வொர்க் மற்றும் உலகெங்கும் பரவும் கொடிய தொற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

மொபைல் போன்கள் மற்றும் செல் டவர்கள் எக்ஸ்-கதிர்கள் மற்றும் புற ஊதா ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்களில் ரேடியோ சிக்னல்களை அனுப்புகின்றன. அவை மனித செல்கள் மற்றும் டி.என்.ஏவை சேதப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு என அவை வகைப்படுத்தப்படுகின்றன.

இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த வீடியோவை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து வீடியோக்களையும் நீக்குகிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவ 5ஜி காரணமில்லை என உறுதியாகி விட்டது.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Corona Virus spreading due to 5g, know what is the truth
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status