சீனா நிறுவனத்தின் போன் ‘ஆபத்தான’ மேலவெர் பயனர்களின் திருட்டு அபாயம்.

சீனா  நிறுவனத்தின்  போன் ‘ஆபத்தான’ மேலவெர்  பயனர்களின் திருட்டு அபாயம்.
HIGHLIGHTS

Xiaomi மற்றும் Realme போன்ற பிராண்டுகள் பட்ஜெட் லிமிட்டில் அதிகம் விரும்பப்படுகின்றன

குறைந்த விலையில் வலுவான சிறப்பம்சங்கள் காரணமாக பிரபலமாக உள்ளன,

Transsion Holdings நிறுவனம் வழங்கும் சீன பிராண்ட் டெக்னோ மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன

சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் வலுவான சிறப்பம்சங்கள் காரணமாக பிரபலமாக உள்ளன, மேலும் அவை இந்தியாவில் பெரிய சந்தைப் பங்கையும் கொண்டுள்ளன. Xiaomi மற்றும் Realme போன்ற பிராண்டுகள் பட்ஜெட் லிமிட்டில் அதிகம் விரும்பப்படுகின்றன. இருப்பினும், ஒரு புதிய அறிக்கை சீன ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கவலைகளை எழுப்பக்கூடும். நிறுவனம் ஒரு சீன பிராண்டின் ஸ்மார்ட்போன்களில் மேல்வெரை முன்கூட்டியே இன்ஸ்டால் செய்து வருவதாகவும், அதன் உதவியுடன் பயனர்களின் டேட்டா மற்றும் பணம் திருடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது, ​​Transsion Holdings நிறுவனம் வழங்கும் சீன பிராண்ட் டெக்னோ மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நிறுவனத்தின் மேலும் இரண்டு பிராண்டுகள், ஐடெல் மற்றும் இன்பினிக்ஸ் என்ட்ரி லெவல் பட்ஜெட் போன்களை உருவாக்குகின்றன. டெக்னோ மற்றும் இன்பினிக்ஸ் இரண்டும் இந்தியாவில் பிரபலமாக உள்ளன, அவற்றின் இரண்டாவது பெரிய சந்தை ஆப்பிரிக்கா ஆகும். மொபைல் பாதுகாப்பு சேவையான செக்யூர்-டி மற்றும் பஸ்ஃபீட் ஆகியவற்றின் விசாரணையில் நிறுவனத்தின் சாதனங்கள் மேல்வேரை முன்பே இன்ஸ்டால் செய்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஆபத்தான' மேலவெர் 

பிராண்டின் டெக்னோ டபிள்யூ 2 ஸ்மார்ட்போனில் இரண்டு மேல்வெர் xHelper  மற்றும் Triada ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. அவர்களின் உதவியுடன், பயனருக்குத் தெரியாமல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து சாதனத்தில் நிறுவலாம் மற்றும் கட்டண சேவைகளை சபஸ்க்ரிபிஷன் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் பயனர், அவர் நிறைய டேட்டாக்களை செலவழிப்பதைக் கண்டறிந்தார், அது தெரியாமல், ஒரு சேவைக்கான சபஸ்க்ரிபிஷன் மெசேஜ் வரும் , அந்த சேவைக்கு பயனர் ஒருபோதும் பதிவு  செய்யமல் இருந்து இருப்பார்கள்.

நிறுவனம் தனது தரை ஒப்புக்கொண்டது 

 Tecno W2 போன்களின் Triada மற்றும் xHelper மேல்வெர் இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. Buzzfeed இன் அறிக்கையின்படி, நிறுவனம் சப்ளை சங்கிலி விற்பனையாளர்களை குற்றம் சாட்டியது. மேல்வெர்லிருந்து  எந்த லாபத்தையும் பெறவில்லை என்று நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், மேல்வெர் காரணமாக எத்தனை ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்படுகின்றன என்ற விவரங்கள், நிறுவனம் பகிரவில்லை.

இந்த பிராண்டிலும் மேல்வெர் 

Secure-D படி, அதன் பாதுகாப்பு அமைப்பு 844,000 மோசடி பரிவர்த்தனைகளைத் தடுத்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மேல்வெரின் உதவியுடன் இந்த பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்டன. TCL  டெக்னாலஜியின் Alcatel போன்களும் மேல்வெரை முன்பே இன்ஸ்டால் செய்ததை கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிறுவனம் இந்தியாவில் போன்களை உருவாக்கவில்லை மற்றும் பிரேசில்-மியான்மரில் பிரபலமாக உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo