Paytm அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை KYC மற்றும் அக்கவுண்ட் Block நடக்கும் மோசடி

Paytm அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை KYC மற்றும் அக்கவுண்ட் Block  நடக்கும் மோசடி
HIGHLIGHTS

A. Your Paytm KYC has expired உங்கள் ( Paytm KYC காலாவதியானது)

B. Or it needs to be renewed ( அல்லது அதை புதுப்பிக்க வேண்டும்)

C. Or your account will be blocked in 24 hours ( அல்லது உங்கள் கணக்கு 24 மணி நேரத்தில் ப்லோக் செய்யப்படும்.).

Paytm Warning: நீங்கள் Paytm கணக்கு வைத்திருப்பவரா? பெரும்பாலும் வங்கி கணக்கு மூலம் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்கிறீர்களா? அப்படியெனில் வங்கிக் கொள்ளையர்களிடமிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பற்றிய சமீபத்திய அறிவிப்பில், ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மோசடி செய்பவர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு ‘பேடிஎம்’ கேட்டுக் கொண்டுள்ளது.

A. Your Paytm KYC has expired உங்கள் ( Paytm KYC காலாவதியானது)
B. Or it needs to be renewed  ( அல்லது அதை புதுப்பிக்க வேண்டும்)
C. Or your account will be blocked in 24 hours ( அல்லது உங்கள் கணக்கு 24 மணி நேரத்தில் ப்லோக் செய்யப்படும்.).

மோசடி செய்பவர்கள் சில மக்களை குறி வைத்து  அவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் SMS அனுப்புகிறார்கள் அதாவது  அதில் உங்களின் Paytm  அக்கவுண்ட்  ப்லோக்  செய்யப்பட்டதாகவும் அல்லது  KYC போன்றவை காலாவதியாகிவிடும் என்று  அதில் கூறப்படுகிறது. மேலும் அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். உண்மையான மோசமான வாடிக்கையாளர்களை மோசடி செய்ய அவர்கள் இரண்டு தந்திரங்களை போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.  உங்களது மொபைல் வேலட்டை உங்களது வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால், இது நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.

பேடிஎம்’ வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், AnyDesk அல்லது Quicks Port உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளது. மொபைல் வேலட்டை வங்கி கணக்குடன் இணைத்திருந்தால், குறிப்பாக KYC  விபரங்களை நிரப்பும்போது மேற்கூறிய செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டாமென பேடிஎம் கூறியுள்ளது

டீம் குவெர், எனிடெஸ்க் மற்றும் குயிக்ஸ் போர்ட் போன்ற ரிமோட் ஆப்களை பயன்படுத்தி, மொபைல் வேலட்டை வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பவர்களிடமிருந்து மோசடிக்காரர்கள் பணம் திருடியதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர, ரிசர்வ் வங்கி, எச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளும் ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தன,

மோசடி செய்பவர்கள் Paytm பயன்பாட்டிற்கு பதிலாக உங்கள் போனில் ப்ரவுஸரில் Paytm.com ஐ திறந்து கேட்கும்படி கேட்டுக்கொள்வார்கள், இதனால் அவர்கள் உங்கள் பாஸ்வர்டை தெளிவான உரையில் பார்க்க முடியும். உங்கள் பாஸ்வர்டை அவர்கள் பெற்றவுடன், மோசடி செய்பவர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து கணக்கை அணுகுவர் (OTP க்கு அவர்கள் அதை சாதனத் ஸ்க்ரீனில் இருந்து படிக்க முடியும் என்பதால் அதை வெளிப்படையாகக் கேட்கத் தேவையில்லை) மற்றும் மோசடி பரிவர்த்தனைகளைத் தொடங்குவார்கள்.

இது போன்ற மெசேஜ் அல்லது கால் வரும்பொழுது தவிர்ப்பது நல்லது மற்றும் அவர்கள் டவுன்லோடு  செய்வதை ஏதும் செய்ய வேண்டாம் என் என்றால் அவர்கள் அனுப்பும் SMS  மூலம் லிங்க்  அனுப்பி அதை டவுன்லோடு செய்வதன் மூலம் உங்களின்  வங்கி  தகவல் அனைத்தயும்  கண்காணிக்க முடியும், இரண்டாவதாக அவர்கள்  உங்கள் OTP  மற்றும் பாஸ்வர்ட் பெறமுடியும் அதன் மூலம்  உங்கள் பணத்தை மொத்தமாக  அபேஸ் செய்ய பெரும் ஆபத்து உங்களுக்கு வந்து சேரும்.எனவே  மக்கள் எப்போழுதும்  இத்தகைய  மோசடியில் இருந்து தங்களை  காப்பாற்றி  கொள்ள வேண்டும் 

● www.paytmuser.com
● www.kycpaytm.in
● jn29832.ngrok.io/index.php etc

மேலும் இவர்கள் இது போன்ற வெப்சைட்டை  தானாகவே உருவாக்கிறர்ர்கள்.

Paytm  KYC  செய்வது எப்படி ? மற்றும் அவை எப்படி இருக்கும்.

  • இதற்க்கு  முதலில்  உங்களிடம்  Paytm App  இருக்க வேண்டியது அவசியமாகும், உங்களிடம் Paytm  இல்லை என்றால் iOS  மற்றும் ஆண்ட்ராய்டு  இரண்டிலும் இதை டவுன்லோடு  செய்து கொள்ளலாம்.
  • நீங்கள் முதலிலிருந்தே  Paytm App பயன்படுத்தி வருபவர் என்றால்  அதை அப்டேட்  செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு Paytm  லோக் இன்  செய்து மற்றும் KYC  யில் க்ளிக் செய்யுங்கள்.
  • நீங்கள் KYC  யில் க்ளிக் செய்த பிறகு, நீங்கள் இப்பொழுது  complete your KYC யில் க்ளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு  நீங்கள் proceed  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் இதை முழுமையாக செய்து முடித்த பிறகு  இப்பொழுது  நீங்கள் இங்கு வோட்டர்  id யில் இருக்கும் நம்பரை  நிரப்ப வேண்டும். அல்லது நீங்கள் உங்கள் பெயர்  நிரப்பிய  பிறகு அதன் பிறகு நீங்கள் Agree யில் டிக் பட்டனை  அழுத்த வேண்டும்.
  • இப்பொழுது  உங்களது நமபரில்  ஒரு  OTP கிடைக்கும் இப்பொழுது  நீங்கள் அந்த OTP  நம்பரை நிரப்ப வேண்டியதாக இருக்கும்  அதன் பிறகு  (verify) வெரிபை  என்பதில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது அங்கு உங்களின் தகவல் வர ஆரம்பித்துவிடும் இப்பொழுது நீங்கள் அங்கு  Yes it’s me  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களின் KYC  முடிந்தது., இருப்பினும்  முழுமை அடைய இதில் நீங்கள் இன்னும் சிலதை  செய்ய வேண்டும்.
  • இப்பொழுது  உங்களின் பிங்கர்ப்ரின்ட்  வெரிஃபிகேஷன் Request in person Verification யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் KYC  பாய்ண்டில்  க்ளிக் செய்ய வேண்டும் 
  • இதன் பிறகு உங்கள் முன்னே ஒரு  லிஸ்ட்  காணப்படும்  உங்கள் அருகில் இருக்கும் KYC  சென்டரின்  தகவலை அங்கு பெறலாம். இங்கு அவர்களின் போன் நம்பர்  மற்றும் லொகேஷன்  தெரியும்.
  • இப்பொழுது நீங்கள் அவர்களை  கால்  செய்து தொடர்பு கொள்ளலாம்  மற்றும் நீங்கள் இவர்களிடம்  சென்று  உங்களின்  KYC  முழுமை  படுத்தலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo