அமேசான் கொரோனாவைரஸ் காரணமாக விற்பனையை நிறுத்தியுள்ளது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 11 May 2021
HIGHLIGHTS
  • ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து

  • நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருக்கிறது

  • இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

அமேசான் கொரோனாவைரஸ்  காரணமாக விற்பனையை நிறுத்தியுள்ளது.
அமேசான் கொரோனாவைரஸ் காரணமாக விற்பனையை நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதனை அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
 
நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.

தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் துவங்கி, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Amazon Prime Day Paused in India due to corona
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status