ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வுக்கான 2020 ஸ்விஃப்ட் விருதை 19 வயதுமாணவர்.

ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வுக்கான 2020 ஸ்விஃப்ட் விருதை 19 வயதுமாணவர்.
HIGHLIGHTS

2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் விருதினை புது டெல்லியை சேர்ந்த 19 வயது மாணவரான பலாஷ் தனெஜா வென்றிருக்கிறார்

நோய் தொற்று எவ்வாறு குறைகிறது என்பதை விவரிப்பதோடு, கோடிங்கை கற்பிக்கும் ஸ்விஃப்ட் பிளேகிரவுண்டினை உருவாக்கினார்.

ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வுக்கான 2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் விருதினை புது டெல்லியை சேர்ந்த 19 வயது மாணவரான பலாஷ் தனெஜா வென்றிருக்கிறார். 2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் போட்டியில் 41 நாடுகளை சேர்ந்த 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்ட தனெஜா கொரோனா வைரஸ் பாதிப்பின் போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதால் நோய் தொற்று எவ்வாறு குறைகிறது என்பதை விவரிப்பதோடு, கோடிங்கை கற்பிக்கும் ஸ்விஃப்ட் பிளேகிரவுண்டினை உருவாக்கினார்.

இவருடன் இந்திய வம்சாவெளியை சேர்ந்த டேவ் ஜா எனும் மாணவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த சிமுலேட்டரை உருவாக்கியதற்கு இதே விருதினை வென்றிருக்கிறார். இவர் சமூக இடைவெளியை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளை விவரித்து இருந்தார்.

புதிய ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் உருவாக்கப்பட்டது. இதை கொண்டு மக்களுக்கு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதன் நன்மைகளை பற்றி விவரிக்க முடியும். 

ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் தவிர ஆன்லைன் வலைதளம் சார்ந்த சேவையினை தனெஜா உருவாக்கி இருக்கிறார். இந்த சேவை மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை கணிக்கும். 

முன்னதாக இவர் கண்டறிந்த சேவை ஒன்று ஆன்லைனில் கிடைக்கும் முன்னணி கல்வி சார்ந்த வீடியோக்களை 40 மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo