கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.
விக்ரம் வெளியாகி 19 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடியை விக்ரம் வசூலித்துள்ளது. இதன் மூலம் 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூலை 'விக்ரம்' முறியடித்துள்ளது.
இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படமானது, தற்போதுவரை உலக அளவில் 350 கோடியை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் ஜூலை 8-ம்தேதி முதல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மல்டி ஸ்டார்களைக் கொண்டு எடுக்கப்பட்ட, பக்கவான திரைக்கதையைக் கொண்டுள்ள விக்ரம், ரூ. 500 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.