சிவகார்த்திகேயன் நடிப்பில் வெலிவந்த Don திரைப்படம் முதல் நாளிலே அமோக வசூலை பெற்றுள்ளது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 14 May 2022
HIGHLIGHTS
  • டான் திரைப்படம் நேற்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது

  • டான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார்

  • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெலிவந்த Don திரைப்படம் முதல் நாளிலே அமோக வசூலை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெலிவந்த Don திரைப்படம் முதல் நாளிலே அமோக வசூலை பெற்றுள்ளது.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.அதனை தொடர்ந்து மே 13 ஆனா நேற்று திரையரங்குகளில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

டான் திரைப்படம் நேற்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடைசி பெஞ்ச் மாணவனாக அவ்ளோவாக படிக்காத அட்டகாசம் செய்கிறார். ஆனால், அப்பா சமுத்திரக்கனியோ ரொம்ப கண்டிப்பானவராக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அன்றைய தினத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படம் வெளியானது. அதனால் டான் படம் மே மாதம் 13ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று அறிவித்தபடி படம் வெளியானது. ரசிகர்கள் டான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுக்க டான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். பள்ளி மாணவனாகவும், கல்லூரி மாணவனாகவும், குடும்பஸ்தனாகவும், 3 வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். காதல், காமெடி , அப்பா சென்டிமென்ட் என தரமான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: sivakarthikeyan Don movie first day collection know here all
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status