தற்போது திரையரங்குகளை காட்டிலும் பெரும்பாலான படங்கள் OTTயிலேயே தான் ரிலீஸ் ஆகுகின்றன. இருப்பினும் மக்களிடையே இது போன்ற இயங்குதளங்களுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் இன்று OTT இயங்குதளத்தில் ரிலீசான டாப் 5 மூவீகள் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள். அந்த வகையில் சமீபத்தில் ரிலீசான டாப் மூவீ பற்றி பார்க்கலாம்.
அகண்டா: போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் ‘அகண்டா/. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த டிச.2 அன்று திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’ இன்று மாலை ஹாட்ஸ்டர் தளத்தில் வெளியாக உள்ளது.
'
முதல் நீ முடிவும் நீ: என்னை நோக்கி பாயும் தோட்டா, நிமிர், கிடாரி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவுள்ளது.
ஷியாம் சிங்கா ராய்: தெலுங்கில் முன்னணி நடிகரான 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான படம் “ஷியாம் சிங்கா ராய்”. இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் உருவான இப்படம் மறுபிறவியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
பேச்சுலர் (Bachelor): இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பேச்சுலர்”. திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று சோனிலிவ் தளத்தில் இன்று வெளியாகிறது.