கியாவின் முதல் கார் Kia EV6 இந்தியாவில் புக்கிங் ஆரம்பமாகியது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 May 2022
HIGHLIGHTS
  • கியா இந்தியா பிராண்டின் முதல் EV, EV6 ஐ ஜூன் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது

  • இந்த காரை ரூ.3 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்

  • கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது

கியாவின்  முதல் கார் Kia EV6 இந்தியாவில் புக்கிங் ஆரம்பமாகியது.
கியாவின் முதல் கார் Kia EV6 இந்தியாவில் புக்கிங் ஆரம்பமாகியது.

கியா இந்தியா பிராண்டின் முதல் EV, EV6 ஐ ஜூன் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. கார் தயாரிப்பாளர் இப்போது ரூ. 3 லட்சம் டோக்கன் தொகையுடன் முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளார், அதாவது விரைவில் வெளியிடப்பட உள்ள இந்த காரை ரூ.3 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். நாட்டின் 12 நகரங்களில் உள்ள 15 டீலர்ஷிப்கள் மூலம் Kia EV6 விற்பனை செய்யப்பட உள்ளது.

கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும். 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Kia EV6 pre-booking starts in india
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status