ஷார்ப் நிறுவனத்தின் Air Purifier அறிமுகம்.

ஷார்ப் நிறுவனத்தின் Air Purifier  அறிமுகம்.

பல நகரங்கங்களில் சுத்தமான காற்று கிடைப்பது என்பது பல மடங்கு சந்தேகமாக இருக்கிறது.உதாரணத்துக்கு நாம்  தில்லியை எடுத்து கொண்டால் இந்தியாவிலே அதிக பொல்யூஷன் கொண்ட நகரமாக இருக்கிறது  இதன் காரணத்தால் பெரும்பாலான மக்கள் மூச்சு தினரலுக்கு உள்ளாகுகிறார்கள் மேலும் சுத்தமான காற்றை விலைகொடுத்துதான் வாங்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. அதனால் பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு ஏ.சி., வாஷிங்மெஷின் போன்ற நவீன சாதனங்களோடு காற்று சுத்திகரிப்பானும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் காற்று சுத்திகரிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது காற்றில் மாசுக்களை வெளியேற்றுவதோடு, அறையில் அதிகபட்ச ஈரப்பதம் நிலவாமல் தடுத்துவிடும். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது மாசு அதிகரிக்கும். இதனால் காற்றில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு நிலவ இது உதவும்.

அத்துடன் அதிக அளவு குப்பை சேர்ந்துவிட்டால் அதை உணர்த்தி நீக்க வலியுறுத்தும் விளக்கு எரியும். கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிப்போர் (ஈரப்பதம் அதிகமிருக்கும்), கடற்கரையோர விடுதிகளில் இதை பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.40 ஆயிரமாகும். ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

இதில் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்மா கிளஸ்டர் ஐயான் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் உள்ளது. இது சலவை இயந்திரம் ஈரத் துணியை உலர்த்த பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போன்றது. இது அறையில் உள்ள ஈரப்பதத்தை போக்க உதவுகிறது. SHARP DWJ20FMW and DW-E16FAW என்ற பெயரில் இது அறிமுகமாகி உள்ளது. குழந்தைகள் எளிதில் கையாள முடியாத வகையில் இதில் சைல்ட்லாக் வசதி உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo