Oppo Reno 14 Pro 5G vs OnePlus 13s (1)
Oppo சமிபத்தில் இந்திய சந்தையில் Oppo Reno 14 Pro 5G அறிமுகம் செய்துள்ளது இதற்க்கு சரியான போட்டியை தரம் ஸ்மார்ட்போன் எது என பார்க்கும்பொது OnePlus 13s எங்கள் கண்ணில் பட்டது இப்பொழுது இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Oppo Reno 14 Pro 5G 6.83-இன்ச் 1.5K பிளாட் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் 240Hz டச் வேரியன்ட் 1200 nits உலகளாவிய ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. அதே நேரத்தில், OnePlus 13s 6.32-இன்ச் LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2640×1216 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
Oppo Reno 14 Pro 5G யில் மீடியாடேக் டிமான்சிட்டி 8450 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது அதுவே OnePlus 13s யில் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
Oppo Reno 14 Pro 5G யில் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் ColorOS 15 யின் கீழ் வேலை செய்கிறது. அதுவே OnePlus 13s யில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் யின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் OxygenOS 15 யில் வேலை செய்கிறது.
Oppo Reno 14 Pro 5G யில் பின் கேமரா பற்றி பேசுகையில் 50 மேகபிக்சல் யின் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, அதுவே செல்பி மற்றும் வீடியோ காலிங்க்க்கு முன் பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது அதுவே OnePlus 13s-ன் பின்புறத்தில் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளன. முன்புறத்தில், 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
Oppo Reno 14 Pro 5G-யில் 6,200mAh பேட்டரி உள்ளது, இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . அதே நேரத்தில், OnePlus 13s-ல் 5,850mAh பேட்டரி உள்ளது, இது 80W SUPERVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:Poco F7 vs iQOO Neo 10: இந்த இரண்டு போனிலும் ஓவர் ஆல் அம்சங்களில் எது பெஸ்ட்?
Oppo Reno 14 Pro 5G 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type C port ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், OnePlus 13s டூயல் சிம், Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, GPS மற்றும் Type C port ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஒப்போ ரெனோ 14 5G ஸ்மார்ட்போனின் 8GB/256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.37,999 மற்றும் 12GB/256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.39,999. அதே நேரத்தில், போக்கோ F7 5G இன் 12GB/256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.31,999 மற்றும் 12GB/512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.33,999 ஆகும்