OnePlus Nord CE5 VS OnePlus Nord CE4 : புதுசா என்ன அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது பார்க்கலாம் வாங்க
OnePlus நேற்று அதன் OnePlus Nord சீரிஸ் அறிமுகம் செய்தது இந்த சீரிஸ் கீழ் Oneplus Nord 5 மற்றும் OnePlus Nord CE5 என இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் OnePlus Nord CE5 போன் OnePlus Nord CE4 யின் அப்க்ரேட் வெர்சனாக இருக்கும் என்பதை கூறப்பட்டுள்ளது இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனில் அம்சங்கள் போன்றவற்றை ஒப்பிட்டு இதில் புதுசா என்ன கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyOnePlus Nord CE5 VS OnePlus Nord CE4: டிஸ்ப்ளே
OnePlus Nord CE5 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.77″ FHD+ சூப்பர் Fluid AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இதில் 2392 × 1080 பிக்ஸல் ரெசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1430nits ப்ரைட்னஸ் வழங்குகிறது Nord CE5 யில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது.
அதுவே இதன் மறுபக்கம் OnePlus Nord CE4 யில் 6.7 இன்ச் FHD+ 120Hz Fluid AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இதில் 2412 × 1080 பிக்சல் ரெசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 2160HZ ப்ரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இதில் பஞ்ச ஹோல் டிசைன் ஸ்க்ரீன் கொண்டுவரப்பட்டுள்ளது.
OnePlus Nord CE5 VS OnePlus Nord CE4:பர்போமான்ஸ் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்.
OnePlus Nord CE5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15.0 யில் வருகிறது. பர்போம்ன்சுக்காக் , இந்த மொபைல் போனில் MediaTek Dimensity 8350 Apex ஆக்டா-கோர் ப்ரோசெசர் உள்ளது, இது 2.2GHz முதல் 3.35GHz வரையிலான கிளாக் ஸ்பீடில் இயங்கும் பவர் கொண்டது. அதே நேரத்தில், கிராபிக்ஸிற்காக ஸ்மார்ட்போனில் Arm G615 MC6 GPU கிடைக்கிறது, இந்த போனில் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் இருக்கிறது
OnePlus Nord CE4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14.0 யில் வந்தது. பர்போமன்சுக்காக , இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ஆக்டா-கோர் ப்ரோசெசர் உள்ளது இது 1.8GHz முதல் 2.63GHz வரையிலான கிளாக் ஸ்பீடில் இயங்கக்கூடியது. கிராபிக்ஸைப் பொறுத்தவரை, இந்த போனில் அட்ரினோ 720 GPU உள்ளது அதுவே Nord CE4 யில் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.
OnePlus Nord CE5 VS OnePlus Nord CE4:கேமரா
இதன் கேமரா பற்றி பேசுகையில் OnePlus Nord CE5 யில் பின்புறத்தில் 50MP மெயின் டெலிபோட்டோ கேமரா Sony LYT600 (OIS) + 8MP அல்ட்ராவைட் சென்சார் ஆகியவை வழங்கப்படுகிறது மற்றும் இதன் முன் பக்கத்தில் செல்பிக்கு 16 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது
அதுவே OnePlus Nord CE4 கேமரா பற்றி பேசுகையில் 50MP Sony LYT600 (OIS) மற்றும் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்குகிறது மற்றும் Nord CE4 செல்பி கேமராவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை அதே 16MP செல்பி கேமரா வழங்குகிறது.
OnePlus Nord CE5 VS OnePlus Nord CE4:பேட்டரி
OnePlus Nord CE5 யின் பேட்டரி பற்றி பேசினால் 7,100mAh பேட்டரியுடன் இதில் 80W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
அதுவே OnePlus Nord CE4 பற்றி பேசினால், இந்த போனில் 5,500mAh பேட்டரியுடன் 100W SUPERVOOC சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
OnePlus Nord CE5 இம்முறை Oneplus AI அம்சங்களை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த போனில் AI எரேசர்,AI ஷாட், AI ரேப்லேக்ஷன் ரிமுவர் மற்றும் பல அம்சங்கள் கொண்டு வந்துள்ளது
OnePlus Nord CE5 VS OnePlus Nord CE4 : விலை
OnePlus Nord CE 5 யின் விலை ரூ.24,999 இல் தொடங்குகிறது, இது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது. 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.26,999 மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.28,999. இந்த போன் பிளாக் இன்ஃபினிட்டி, மார்பிள் மிஸ்ட் மற்றும் நெக்ஸஸ் ப்ளூ உள்ளிட்ட மூன்று கலர் விருப்பங்களில் கிடைக்கும்.
அதுவே OnePlus Nord CE4 5G போன் இன்று Nord CE5 அறிமுகப்படுத்தப்பட்ட அதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலையும் ரூ.24,999 ஆகும், இதில் 128GB சேமிப்பு 8GB RAM உடன் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.26,999க்கு கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க:OnePlus Nord 5 மற்றும் Nord CE 5 ஸ்மார்ட்போன் 7,100mAh பேட்டரியுடன் அறிமுகம்
OnePlus Nord CE5 VS OnePlus Nord CE4 ஒப்பிட்டு பார்த்ததில் எது பெஸ்ட்?
இப்பொழுது இந்த இரு போனையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் முன்பே குறிப்பிட்டது போல, புதிய Nord CE5 ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, இது பழைய Nord CE4 விட பல வழிகளில் சிறந்தது. ஆனால் AI தவிர மற்ற அம்சங்களைப் பார்த்தால், நிறுவனம் Nord CE5 யில்மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டை வழங்கியுள்ளது, இது Nord CE4 மட்டுமல்ல, இந்த ரேஞ்சில் உள்ள பல மொபைல்களுக்கும் நேரடி போட்டியை அளிக்கிறது.
OnePlus Nord CE5 தான் இந்த பிராண்டின் மிகப்பெரிய பேட்டரி கொண்ட மொபைல் போன். Nord CE5 உடன் நீண்ட காலம் நீடிக்கும், ஏனென்றால் இவ்வளவு பெரிய பேட்டரி கொண்டுவந்துள்ளது மேலும் இதில் 80W FlashCharge சப்போர்ட் வழங்குகிறது அதே இதன் மறுபக்கம் Nord CE4 யில் 5,500mAh பேட்டரி மற்றுமே வழங்குகிறது இருப்பினும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டில் 100W SUPERVOOC சார்ஜிங் உடன் முன்னே செல்கிறது.
இப்பொழுது இதன் கேமரா செக்மண்டுக்கு வரும்போது இதில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை கிட்டத்தட்ட ஒரே மாதுரி தான் இருக்கிறது மற்றும் இதன் ரேம் அவ்வளவு பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile