OnePlus Nord 5 மற்றும் Nord CE 5 ஸ்மார்ட்போன் 7,100mAh பேட்டரியுடன் அறிமுகம்

HIGHLIGHTS

Oneplus இன்று அதன் Oneplus Nord சீரிஸ் அறிமுகம் செய்தது

Nord 5 மற்றும் OnePlus Nord CE5 ஆகிய இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது

இதில் OnePlus AI இது OxygenOS ஸ்லீக் டிசைன் கொண்டுள்ளது

OnePlus Nord 5 மற்றும் Nord CE 5 ஸ்மார்ட்போன் 7,100mAh பேட்டரியுடன் அறிமுகம்

Oneplus இன்று அதன் Oneplus Nord சீரிஸ் அறிமுகம் செய்தது இந்த சீரிஸ் யின் கீழ் Nord 5 மற்றும் OnePlus Nord CE5 ஆகிய இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது இதில் OnePlus AI இது OxygenOS ஸ்லீக் டிசைன் கொண்டுள்ளது மற்றும் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மேலும் இதில் பல அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Nord 5 சிறப்பம்சம்.

OnePlus Nord 5 சீரிஸ் கீழ் ஸ்மூத் எட்ஜ் உடன் Nord 5 யில் 6.83 -இன்ச் கொரில்லா கிளாஸ் 7i-ப்ரோடேக்ச்னுடன் இது ஒரு பிளாட் டிஸ்ப்ளே உடன் AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது இதனுடன் இது 1800 நிட்ஸ் ப்ரைட்னாஸ் 3000Hz டச் ரேச்போன்ஸ் வழங்குகிறது.

இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த போனில் Snapdragon 8s Gen 3 சிப்செட்டுடன் இது 12GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் சப்போர்டுடன் வருகிறது

Nord 5 கேமராவில் OIS உடன் கூடிய 50MP Sony பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 4K 60fps வரை வீடியோவை சப்போர்ட் செய்கிறது . முன்பக்கத்தில், 4K 60fps வரை வீடியோவை சப்போர்ட் செய்யும் 50MP முன்பக்க கேமராவைப் வழங்குகிறது .

இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 6,800mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த போன் IP65-வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது .

இதையும் படிங்க Honor யின் புதிய போன் 6,600mAh பேட்டரியுடன் அறிமுகம் டாப் டக்கரு அம்சங்கள் பாருங்க

OnePlus Nord CE 5 சிறப்பம்சம்.

OnePlus Nord CE 5 6.72-இன்ச் AMOLED பேனலுடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1100 nits ப்ரைட்னஸ் உடன் வருகிறது. இது HDR சப்போர்ட் மற்றும் eye (கண்)கம்பர்ட் அம்சங்களையும் வழங்குகிறது.

Nord CE 5 கேமராவில் OIS மற்றும் EIS உடன் கூடிய 50MP Sony LYT-600 ப்ரைம் சென்சார் உள்ளது, இது 8MP அல்ட்ராவைடு லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4K 60fps ரெக்கார்டிங் மற்றும் ஸ்லோ மோஷன் மற்றும் டைம்-லேப்ஸ் உள்ளிட்ட பல வீடியோ முறைகளை சப்போர்ட் செய்கிறது . முன்பக்கத்தில், இந்த போனில் 1080p பதிவு, போர்ட்ரெய்ட் மோட் மற்றும் ஸ்க்ரீன் ஃபிளாஷ் கொண்ட 16MP முன் சென்சார் உடன் வருகிறது.

இது Snapdragon 7 Gen 3 செயலியில் இயங்குகிறது, 12GB வரை RAM விரிவாக்க விருப்பங்களும் 256GB வரை ஸ்டோரேஜ் உள்ளன, இதில் 1TB வரை மைக்ரோ SD கார்டுகளுக்கான சப்போர்ட் அடங்கும். இந்த சாதனம் 7,100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

Nord 5 மற்றும் Nord CE 5 ஆகியவை இரட்டை சிம் 5G, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, NFC மற்றும் IR பிளாஸ்டர்களை ஆதரிக்கின்றன. இரண்டு போன்களும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்கள், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சத்தம் ரத்துசெய்தலை வழங்குகின்றன.

OnePlus Nord 5 மற்றும் OnePlus Nord CE 5 விலை தகவல்.

OnePlus Nord 5 இந்தியாவில் மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இதன் அடிப்படை வேரியன்ட் – 8GB + 256GB இதன் விலை ரூ.31,999, 12GB + 256GB வகை ரூ.34,999, மற்றும் 12GB + 512GB வகை ரூ.37,999 ஆகும் மேலும் இது Dry Ice, Marble Sands, Phantom Grey கலரில் வாங்கலாம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 9 அன்று பகல் 12 மணிக்கு OnePlus இந்திய ஆனலின் மற்றும் ஆப்லைன் ஸ்டோர் மற்றும் Amazon யில் பேங்க் டிஸ்கவுண்ட் யின் கீழ் ரூ,2,000 இன்ஸ்டன்ட் பெற முடியும்

OnePlus Nord CE 5 யின் விலை ரூ.24,999 இல் தொடங்குகிறது, இது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது. 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.26,999 மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.28,999. இந்த போன் பிளாக் இன்ஃபினிட்டி, மார்பிள் மிஸ்ட் மற்றும் நெக்ஸஸ் ப்ளூ உள்ளிட்ட மூன்று கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் ஜூலை 12 (நள்ளிரவு 12 மணி) முதல் OnePlus Nord CE 5 ஐ வாங்கலாம். இந்த விற்பனை OnePlus ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள், Amazon.in மற்றும் பிற கூட்டாளர் ரீடைளர் விற்பனையாளர்களில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான பேங்க் அட்டைகள் மூலம் Nord CE 5 ஐ வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி உட்பட சில சலுகைகளும் உள்ளன. அதே நேரத்தில், No Cost EMI விருப்பங்களும் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo