Nothing யின் புதிய போன் இன்று அறிமுகம் நேரம் என்ன லைவ் பார்ப்பது எப்படி
Nothing Phone 3 போன் ஜூலை 1 ஆன இன்று அறிமுகமாகிறது
Nothing Phone 3 இந்திய நேரப்படி இது இன்று இரவு 10:30 மணிக்கு அறிமுகமாகும்
இந்தியாவில் மட்டுமல்லாமல் இது உலகலாவின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த அதன் Nothing Phone 3 போன் ஜூலை 1 ஆன இன்று அறிமுகமாகிறது மேலும் இதன் டீசர் ப்ளிப்கார்டில் டீசர் லைவ் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போன் இன்று இரவு அறிமுகமாகிறது இதன் முழு அறிமுக தகவல் மற்றும் நேரம் போன்றவற்றை பார்க்கலாம் வாங்க.
SurveyNothing Phone 3 அறிமுகம் தகவல்
Nothing Phone 3 இந்திய நேரப்படி இது இன்று இரவு 10:30 மணிக்கு அறிமுகமாகும், நிறுவனம் மேலும் நிகழ்வு லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது, இந்தியாவில் மட்டுமல்லாமல் இது உலகலாவின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன் வெளியீட்டு நிகழ்வை நீங்கள் நேரலையில் பார்க்க விரும்பினால், நத்திங்கின் அதிகாரப்பூர்வ சேனல் அல்லது கீழே எம்பாட் வீடியோ மூலம் பார்க்கலாம்.
Come to Play.
— Nothing (@nothing) June 3, 2025
Phone (3). 1 July, 18:00 BST. pic.twitter.com/9afIpKao1s
Nothing Phone 3 சிறப்பம்சம்.
இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவலின் படி Nothing Phone 3 யில் 6.7 இன்ச் யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது
இதனுடன் இந்த போனில் Qualcomm யின் புதிய Snapdragon 8s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர கேமரா செட்டப் பற்றி பேசினால் இந்த போனில் ஒரு 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இது ஆப்டிக்கல் ஜூம் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர முன் பக்கத்தில் ஒரு 50MP கேமரா இருக்கும்.
போன் 3-ல் 5,150mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் , இது 100W வேகமான சார்ஜிங் ஆதரவைப் பெறும். இதனுடன், வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களும் சேர்க்கப்படலாம். மிக முக்கியமான விஷயம் அதன் புதிய கிளிஃப் மேட்ரிக்ஸ் LED இடைமுகம், இது பின்புறத்தில் சிறிய புள்ளிகள் மூலம் அறிவிப்புகள் மற்றும் அனிமேஷன்களைக் காண்பிக்கும்.
இதையும் படிங்க: POCO யின் இந்த போன் இன்று முதல் விற்பனை பேங்க் ஆபருடன் வெறும் ரூ,27,999 யில் வாங்கலாம்
மென்பொருளைப் பற்றி பேசுகையில், இந்த போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்ட நத்திங் OS 3.5 யில் இயங்கும். பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்களையும் 7 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு சப்போர்டை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
விளம்பரம்
விலையைப் பற்றிப் பேசுகையில், நத்திங் போன் 3 இன் சாத்தியமான விலையை அறிவித்த கூகிள் நிகழ்வில் நத்திங் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் ஆச்சரியப்பட்டார். இந்த போனின் விலை சுமார் £800 (சுமார் ரூ. 92,000) என்று அவர் கூறினார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile