Vivo யின் பவர் புல் போன் வெறும் ரூ,9,499 அறிமுகம் டாப் அம்சங்களை பாத்தா அசந்து போவிங்க
Vivo இன்று இந்தியாவில் அதன் Vivo T4 Lite 5G போன் அறிமுகம்
இந்த போனில் 6000mah பேட்டரி உடன் வருகிறது
பேங்க் ஆபருக்கு பிறகு இதன் 4GB+128GB ரூ,9,499, வாங்கலாம்
Vivo இன்று இந்தியாவில் அதன் Vivo T4 Lite 5G போன் அறிமுகம், மேலும் இது AI அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 6000mah பேட்டரி உடன் வருகிறது மேலும் நீங்கள் இந்த போனில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்க்கு மேல் கேமிங் விளையாட முடியும் மேலும் இது கேமிங் பிரியர்களுக்கு மிக சிறந்த போனாக இருக்கும்இதை தவிர இதில் MediaTek Dimensity 6300 சிப்செட் போன்ற பல ப்ரோசெசர் இருக்கும் மேலும் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVivo T4 Lite 5G சிறப்பம்சம்.

டிசைன்: விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் ப்ளூ மற்றும் லைட் கோல்ட் கலரில் வரும் என டீசர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேனலின் மேல் இடது மூலையில் வெர்டிக்கள , பில் வடிவ பின்புற கேமரா தொகுதியைக் கொண்டிருக்கும், இதில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உள்ளது.
விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன், மெலிதான டிஸ்ப்ளே பெசல்கள் மற்றும் மேலே மையப்படுத்தப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் ரேட்டிங்கை கொண்டிருக்கும். இது SGS 5-ஸ்டார் ஆண்டி-ஃபால் பாதுகாப்பு மற்றும் MIL-STD-810H மிலிட்டரி-கிரேடு நீடித்துழைப்பு சான்றிதழ்களைக் கொண்டிருக்கும்.
டிஸ்ப்ளே:Vivo T4 Lite 5G போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.74 இன்ச் டிஸ்ப்ளே TÜV Rheinland low லைட் சர்டிபிகேசன் மற்றும் இதில் 1,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது
பர்போமான்ஸ்: Vivo T4 Lite 5G போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 6300 SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் FuntouchOS 15 யில் இயங்குகிறது. இதை தர இந்த போனை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்
கேமரா : இந்த போனின் கேமராவை பற்றி பேசினால் இதில் இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அதில் மெயின் கேமரா 50MP Sony AI கேமரா மற்றும் 2MP போக்கே கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு முன் பக்கத்தில் 50MP கேமரா இதனுடன் இதில் AI எரேசர் மற்றும் AI Photo Enhance போன்ற அம்சம் வழங்குகிறது.
இதையும் படிங்க Vivo யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க
பேட்டரி: Vivo T4 Lite 5G ஸ்மார்ட்போன் 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த ஸ்மார்ட்போன் 70 மணி நேரத்திற்கும் மேலான இசை பின்னணி, 22 மணி நேரத்திற்கும் மேலான ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் அல்லது ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான கேமிங் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது சார்ஜருடன் பாக்ஸில் அனுப்பப்படும். மேலும் இந்த போனின் விற்பனை ஜூலை 2 அன்று பகல் 12மணிக்கு இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் வாங்கலாம்
Vivo T4 Lite 5G விலை தகவல்

Vivo T4 Lite 5G போனின் ஆரம்ப விலை 4GB+128GB ரூ,9999, 6GB +128GB ஸ்டோரேஜ் விலை ரூ,10,999 மற்றும் அதன் 8GB+256GB ஸ்டோரேஜ் ரூ,12,999 ஆக வைக்கப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதன் 4GB+128GB ரூ,9,499,அதுவே 6GB +128GB ரூ,10,499 மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜை ரூ,12,499க்கு வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile