Apple iphoneக்கு பிறகு AirPods இந்தியாவில் தயாரிக்க அதிரடி முடிவு

Apple iphoneக்கு பிறகு AirPods இந்தியாவில் தயாரிக்க அதிரடி முடிவு

அமேரிக்கா தயாரிக்கும் நிறுவனமான Apple அதன் iPhoneக்கு பிறகு AirPods யின் மெனுபெக்ஜர் இந்தியாவில் மேனுபெக்ஜர் செய்ய ஆரம்பமாக இருக்கிறது. ஆப்பிளின் காண்ட்ராக்ட் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் தொழிற்சாலையில் ஏர்போட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஏர்போட்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கடந்த மாதம், ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் 16 போனன i போன் 16 E உள்ளூர் சந்தைக்காகவும் ஏற்றுமதிக்காகவும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என்று அறிவித்தது . உண்மையில், ஐபோன் 16 மற்றொரு வகையான போனையும் படைத்தன, ஏனெனில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐபோன் ப்ரோ மாடல்கள் ஆகும். “ஐபோன் 16 இ உட்பட முழு ஐபோன் 16 வரிசையும் இந்திய கன்ச்யுமருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது” என்று ஆப்பிள் கூறியிருந்தது.

Press Trust of India (PTI) அறிக்கையின் படி இது தொடர்பாக, தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கானின் ஹைதராபாத் ஆலையில் ஏற்றுமதிக்காக AirPods தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது. “ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி தொடங்கும்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியின் ஒரு பகுதியை சீனாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களை நாட்டில் தயாரிப்பது இதில் ஒரு முக்கியமான படியாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஏர்போட்களை தயாரிக்க சுமார் 400 மில்லியன் டாலர் முதலீட்டை ஃபாக்ஸ்கான் ஒப்புதல் அளித்தது.

மார்கெட் ரிசர்ச்சின் படி Canalys அறிக்கையின் கீழ் கடந்த ஆண்டு ட்ரூ வயர்லெஸ் ஸ்டிரியோ (TWS) யின் இண்டர்நேசனல் சந்தையில் ஆப்பில் சுமார் 23.1 சதவிகிதம் உடன் இதில் முதலிடம் பிடித்துள்ளது.தென் கொரியாவின் சாம்சங் சுமார் 8.5 சதவீத பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. சமீபத்தில், கர்நாடக அரசு ஃபாக்ஸ்கானுக்கு சுமார் ரூ.6,970 கோடி ஊக்கத்தொகையை வழங்கியுள்ளது . ஃபாக்ஸ்கான் இந்தியாவிலும் சீனாவிலும் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. கர்நாடக அரசு இந்த தைவான் நிறுவனத்திற்கு மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ESDM) துறைக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்கியுள்ளது.

Foxconn விரைவில் கர்நாடகா அசெம்பில்ங்கின் ஆலை ஆரம்பம் செய்ய ஆரம்பித்துள்ளது இந்த உற்பத்தி ஆலையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடி ஸ்மார்ட்போன்கள் அசெம்பிள் செய்யப்படும். கர்நாடகா ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற திட்டமிட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான ஊக்கத்தொகையைப் பெறும் முதல் மின்னணு உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான் ஆகும். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிளின் மலிவு விலை ஐபோன் 16e இன் அசெம்பிளி இந்தியாவில் தொடங்கியது. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் SE-ஐ மாற்றும். நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் ஐபோன் 16e, இந்தியாவில் விற்கப்படும் அதே போல் சில நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். நிறுவனத்தின் ஐபோன் 16 தொடரும் நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடருடன் முதன்முறையாக நாட்டில் ஐபோனின் ப்ரோ மாடல்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

இதற்கு இணையாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சில்லறை விற்பனையை அதிகரித்து வருகிறது. டெல்லி மற்றும் மும்பையில் தற்போதுள்ள கடைகளுடன், தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நவம்பர் 2024 இல் நான்கு கூடுதல் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் . பெங்களூரு, புனே, டெல்லி-என்சிஆர் பிராந்தியத்திற்கும், மும்பையில் இரண்டாவது இடத்திற்கும் புதிய கடைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க iPhone யின் இந்த போனில் ரூ,15,500 வரை டிஸ்கவுண்ட் இதை எப்படி பெறுவது பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo