Tecno Spark 20 Pro ஸ்மார்ட்போன்108MP கேமராவுடன் அறிமுகம்

HIGHLIGHTS

நிறுவனம்Tecno Spark 20 Pro ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

டெக்னோ ஸ்பார்க் 19 ப்ரோவின் வாரிசாக வந்துள்ளது.

போனில் 5000mAh பெரிய பேட்டரி உள்ளது. Helio G99 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tecno Spark 20 Pro ஸ்மார்ட்போன்108MP கேமராவுடன் அறிமுகம்

நிறுவனம் Tecno Spark 20 Pro ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டெக்னோ ஸ்பார்க் 19 ப்ரோவின் வாரிசாக வந்துள்ளது. போனில் 5000mAh பெரிய பேட்டரி உள்ளது. Helio G99 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்களில், 108 மெகாபிக்சல் பின்புற கேமரா போனில் உள்ளே கிடைக்கிறது, இது டிரிபிள் கேமரா செட்டிங்கின் முக்கிய லென்ஸாகும். நிறுவனம் செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் கேமராவை வழங்கியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் அனைத்து சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tecno Spark 20 Pro Price

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிலிப்பைன்ஸில் PHP 5599 (தோராயமாக ரூ. 8,300) விலையில் கிடைக்கிறது. இது மூன்லிட் பிளாக், ஃப்ரோஸ்டி ஐவரி, சன்செட் ப்ளஷ் மற்றும் மேஜிக் ஸ்கின் கிரீன் கலரில் அறிமுகம் செய்யப்பட்டது

Spark 20 Pro சிறப்பம்சம்.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 6.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஐபிஎஸ் LCD டிஸ்ப்ளே என்று கூறப்படுகிறது. இது FHD+ ரேசளுசன் கொண்டுள்ளது ஃபோன் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது. இந்த போன் ஒரு ப்ளேட் பிரேம் கொண்டுள்ளது. இதில் பவர் பட்டனில் கொடுக்கப்பட்டுள்ள பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

கேமராவைப் பற்றி பேசுகையில், போனில் டிரிபிள் கேமரா உள்ளது, இதில் முக்கிய லென்ஸ் 108 மெகாபிக்சல்கள். சப்போர்ட் இருக்கிறது, மேலும் 2 லென்ஸ்கள் உள்ளன. செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போன் MediaTek Helio G99 சிப்செட் உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாகவும் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.

இதையும் படிங்க:Airtel யின் வருடாந்திர பிளானில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் இலவச OTT

Tecno Spark 20 Pro ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் மூலம் இயங்குகிறது. கனேக்டிவிட்டிக்கு இது 4G VoLTE, USB-C போர்ட், 3.5mm ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போன் IP53 என ரேட்டிங் இருக்கிறது இது சவுண்டுக்கு இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo