வாட்ஸ்அபபில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம்
இந்த ஸ்டிக்கர் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் வாருங்கள்
வாட்ஸ்அப் ஆப் யில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் அம்சம் இப்பொழுது வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக பயனர்களுக்கு இப்பொழுது வழங்கி இருக்கிறது.
Surveyஇந்த புதிய ஸ்டிக்கர் அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுவதால், அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க சில நாட்கள் ஆகும். இத்துடன் வாட்ஸ்அப் ஆப்யில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
முதலில் இந்த ஸ்டிக்கர்ஸ் அம்சத்தில் கப்பி என்ற பெயரில் ஒரே பேக் மட்டும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை அன்-இன்ஸ்டால் செய்து, கூடுதலாக கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்களை இன்ஸ்டால் செய்யலாம். ஸ்டிக்கர்கள் ஈமோஜி, போட்டோக்கள் அல்லது ஜிஃப்களை விட வித்தியாசமானவை. இவை இயங்குதளங்கள் அல்லது எமோஜி போன்ற வெப்சைட்களில் ஆதரவின்றி கிடைக்கிறது.
ஆன்ட்ராய்டு மற்றும் IOS .தளங்களில் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் ஜிஃப் ஐகானை அடுத்து வலதுபுறத்தில் ஸ்டிக்கர் ஐகான் தெரியும். இதில் பயனர் விரும்பும் ஸ்டிக்கர்களை செலக்ட் செய்து கொள்ளலாம். IOS . பயனர்கள் டெக்ஸ்ட் இன்புட் பகுதியில் காணப்படும் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.
புதிதாக பேக்களை சேர்க்க ஸ்டிக்கர் பகுதியியன் இடது புறத்தில் இருக்கும் பிளஸ் ஐகானஐ கிளிக் செய்து ஸ்டிக்கர் ஸ்டோர் செல்ல வேண்டும். இங்கு அனைத்து ஸ்டிக்கர்களும் இடம்பெற்றிருக்கும். பயனர்கள் ஸ்டிக்கர்களை பிரீவியூ மற்றும் டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மை ஸ்டிக்கர்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

