உங்களின் ஆதார் போட்டோவை மற்றும் உங்கள் வீட்டு முகவரி அதில் UIDIAi பேஸ் அதேடிகேஷன் உதவியுடன் எளிதாக அப்டேட் செய்யலாம்  அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க

முதலில் நீங்கள் UIDAI யின் அதிகாரபூர்வ uidai.gov.in யில் செல்ல வேண்டும்.

இப்போது நீங்கள் ஆதார் சேர்க்கை பார்மை  வெப்சைட்டிலிருந்து  டவுன்லோட்  செய்ய வேண்டும் (இது தவிர, பார்மை  அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா அல்லது ஆதார் சேர்க்கை மையத்திலிருந்தும் பெறலாம்.)

இப்போது தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு பார்மில்  உள்ளிட வேண்டும்.

அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா அல்லது ஆதார் ரெஜிஸ்டர்  மையத்தில் சமர்ப்பிக்கலாம். 

அருகிலுள்ள மையத்தைக் கண்டறிய, appointments.uidai.gov.in/ என்ற லிங்கை  கிளிக் செய்யலாம்.

மையத்தில் இருக்கும் ஆதார் நிர்வாகி அனைத்து தகவல்களையும் பயோமெட்ரிக் வெரிபிகேஷன்  மூலம் உறுதி செய்வார்.

பின்னர் மேனேஜ்  ஆதார் கார்டில்  புதிய போட்டவை  அப்டேட் செய்ய  அதைக் கிளிக் செய்வார்.

இந்தச் சேவைக்கு, ஜிஎஸ்டியுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

பின்னர் உங்களுக்கு ஒரு அப்டேட்  ரெகுவஸ்ட்  நம்பர்  (URN) மற்றும் ஒரு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும், இது UIDAI வெப்சைட்டில்  அப்டேட்  நிலையைக் கண்காணிக்கப் பயன்படுகிறது.