உங்க போனில் வைரஸ் இருந்தா எச்சரிக்கை.பயனர்களின் தகவலை திருடும் ஆண்டி வைரஸ்

உங்க போனில் வைரஸ் இருந்தா எச்சரிக்கை.பயனர்களின்  தகவலை திருடும் ஆண்டி வைரஸ்
HIGHLIGHTS

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செயலிகள், கேம்களை தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர், வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன

புதிய செயலிகளில் பயனர்களின் லாகிங் தகவல்களை திருடும் மால்வேர்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செயலிகள், கேம்களை தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது. கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன.

ஆனால் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர், வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகளில் பயனர்களின் லாகிங் தகவல்களை திருடும் மால்வேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் முக்கியமான அம்சம் இந்த செயலிகள் எல்லாம் வைரஸ்களை நீக்குவதாக கூறும் ஆண்டி வைரஸ் செயலிகள் என்பது தான்.
 
Atom Clean booster antivirus, Antivirus super cleaner, Alpha antivirus cleaner, Powerful Cleaner, antivirus, Center Security Antivirus ஆகிய செயலிகள் மால்வேர்களை கொண்டுள்ளது.

இந்த செயலிகளை கூகுள் கண்டறிந்து நீக்குவதற்கு முன் 15,000க்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த மால்வேரால் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டி வைரஸ் செயலிகளில் ஷார்க்பாட்ஸ் என்ற மால்வேர் இடம்பெற்றுள்ளது. இது பயனர்களின் நம்முடைய யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது. அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து. நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது.

பிற தளங்களில் இருந்து ஏபிகே ஃபைல்களை டவுன்லோட் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என கூகுள் எச்சரித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலேயே தொடர்ந்து பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo
Compare items
  • Water Purifier (0)
  • Vacuum Cleaner (0)
  • Air Purifter (0)
  • Microwave Ovens (0)
  • Chimney (0)
Compare
0